பயோ பபிள் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி – ஐசிசி புதிய முடிவு

0
80
Bio Bubble in Cricket

கொரோனா தொற்று காரணமாக கிரிக்கெட் விளையாடச் செல்லும் வீரர்கள் எல்லாம் பயோ பபிள் முறையை கடைபிடிக்கின்றனர். பயோ பபிள் முறையில் வீரர்கள் வெளியே இருக்கும் யாரிடமும் தொடர்பில் இருக்க முடியாது. போட்டிகள் முடியும் வரை வெளியே செல்ல முடியாது. இந்த முறை பல வீரர்களுக்கு உளவியல் ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்று பலரும் கருத்து கூறி வந்தனர். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி விரைவில் வெளியேறியற்கு இதுகூட காரணமாக சொல்லப்பட்டது. மன ரீதியாக பல வீரர்களை பலவீனமாக்க இந்த முறை தற்போது சீக்கிரம் முடிவுக்கு வரும் என்பது போல் தெரிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஐசிசி நிர்வாகக் குழு சந்திப்பில் இது பற்றி பேசப்பட்டது. பிரீமியர் லீக் போன்ற கால்பந்து தொடர்களில் பயோ பபிள் முறை கடைபிடிக்கப் படவில்லை என்பது வாதமாக முன்வைக்கப்பட்டது. பயோபபிள் முறை இல்லாமல் வீரர்களும் வீரர்களை சார்ந்திருக்கும் மற்ற அணி நிர்வாகிகளும் தொடர்ந்து அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் முறைதான் கால்பந்து பிரீமியர் லீக் தொடரில் கடைபிடிக்கப் படுகிறது என்று கூறப்பட்டது. மேலும் யாராவது ஒருவருக்கு கொரோனா வந்தால் கூட அவர்களை மட்டும் தான் தனிமை படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து சென்றது. அதன் பிறகு இங்கிலாந்து தொடர் மீண்டும் ஐபிஎல் மறுபடியும் 20 உலகக் கோப்பை தொடர் என்று கடந்த பல மாதங்களாக இந்திய அணி பயோபபிளுக்குள்ளேயே இருக்கிறது. வீரர்களின் செயல்பாடு இதனால் பாதிக்கப்படுகிறது என்று இந்திய வீரர் பும்ரா ஒருமுறை தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட பிராட்மேனாக இருந்தாலும் பயோபபிளுக்குள்ளேயே தொடர்ந்து இத்தனை காலங்கள் இருந்தால் அது வீரர்களின் திறனை பாதிக்கும் என்று கூறினார். இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் இதே கருத்தைத்தான் தெரிவித்தார். வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாமல் இருந்தால் வீரர்களை மனதளவில் மிகவும் பாதிக்கிறது என்று அவர் கூறினார்.

பயோ பபிள் முறை விரைவில் நீக்கப்பட்டார் வீரர்களின் ஆட்டத்திறன் அதிகரிக்கும் என்று ரசிகர்கள் பெருவாரியாக கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.