2024 டி20 உலககோப்பையில் அதிரடி மாற்றங்கள்.. ஐசிசி அறிவிப்பு.. முழு விவரம்

0
656

2024 ஆம் ஆண்டு ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. டி20 கிரிக்கெட் தற்போது வளர்ந்து வருவதால் ஐசிசி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி அடுத்த டி20 உலக கோப்பையில் இருந்து 20 அணிகள் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் போட்டி நடைபெறும் முறையும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

அதாவது அந்த 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை வரை முதல் சுற்றில் தனியாக கத்துக்குட்டி அணிகள் மோதும். அதன் பிறகு அதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். ஏற்கனவே சிறிய அணிகள் டி20 உலக உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகளில் பங்கேற்று விட்டு தான் மெயின் தொடர்க்கு வருகின்றன. ஆனால் அங்கேயும் முதல் சுற்றி என தனியாக நடத்திவிட்டு மெயின் சுற்றில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சிறிய அணிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு இனி போட்டி பழைய முறைப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இம்முறை 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒரு பிரிவில் ஐந்து அணிகள் இடம்பெறும். இதில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் டாப் இரண்டு இடத்தை பிடிக்கும் பணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். ஒவ்வொரு பிரிவு அணியும் தங்களுக்குள் மோதிய பிறகு முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும்.

இதன் மூலம் அனைத்து அணிகளுக்கும் சம வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் பல அணிகள் முதல் சுற்றில் குறைந்த போட்டியில் விளையாடி விட்டு வெளியேறும் அபாயமும் தடுக்கப்படுகிறது. இதே போன்று எந்தெந்த அணிகள் தற்போது நேரடியாக 2021 டி20 உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது என்பதை ஐ சி சி அறிவித்துள்ளது. அதன் படி, போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் நேரடியாக தத்திப் பெற்றுள்ளன.

- Advertisement -

இதன்பிறகு இந்தியா ,நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து ,இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நெதர்லாந்து ஆகிய 12 அணிகள் நேரடியாக தகுதி பெறும். இதனை தொடர்ந்து எஞ்சிய எட்டு அணிளுக்கான தகுதி சுற்று வரும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.