ஐசிசி 2021ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருதுக்கு தேர்வாகியுள்ள 4 வீரர்கள் – ஒரு இந்திய வீரர் கூட இல்லை

0
713
Babar Azam and Paul Stirling

2021 ஆம் ஆண்டு முடிந்து தற்போது புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஒரு ஆண்டு முடிந்து விட்டாலே அந்த ஆண்டில் சிறப்பாக ஒவ்வொரு ஃபார்மட்டிலும் ஆடிய வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது கொடுத்து ஊக்கப்படுத்துவது ஐசிசி வாரியத்தின் வழக்கம். அதே போல இந்த ஆண்டும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் விருதுகளை வழங்க உள்ளது ஐசிசி. அப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக தங்களது திறமைகளை நிரூபித்த நான்கு வீரர்களை தேர்வு செய்து அதில் ஒரு வீரருக்கு அடுத்த ஆண்டு விருதை வழங்க உள்ளது ஐசிசி. இந்திய அணி மிகவும் குறைவான ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு விளையாடியதால் இந்தியாவிலிருந்து எந்த ஒரு வீரரும் இந்த விருதுக்கு தகுதி பெறவில்லை.

ஐசிசி அறிவித்துள்ள வீரர்கள் வரிசையில் வங்கதேசத்தை சேர்ந்த ஷகிப் அல் ஹசன், பாகிஸ்தானின் பாபர் அசாம், தென்னாபிரிக்காவின் மாலன் மற்றும் அயர்லாந்தின் ஸ்டிர்லிங் ஆகியோர் உள்ளனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டிர்லிங் பெயர் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும் இந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் இவர்தான். அயர்லாந்து அடிக்காத 14 போட்டிகளில் 705 ரன்கள் குவித்துள்ளார். இந்த ஆண்டில் இவரது சராசரி 54 ஆகும்.

- Advertisement -

அதேபோல தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மாலன் தான் இந்த ஆண்டு அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 7 இன்னிங்ஸ்கள் விளையாடி 509 ரன்கள் குவித்துள்ளார் இவர். இந்த ஆண்டில் இவரது சராசரி 85 ஆகும். இவரைப்போலவே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் ஆறு போட்டியில் விளையாடி 405 ரன்கள் குவித்துள்ளார். இவரது சராசரி 67.5 ஆகும்.

வங்கதேச நாட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 9 போட்டிகளில் விளையாடி 277 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் பிரமாதமாக செய்யப்பட்ட 17 விக்கெட்டுகளை இந்த ஆண்டு சாய்த்துள்ளார் இவர். இப்படி மிகச்சிறந்த 4 வீரர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து விருது கொடுப்பது மிகவும் கடினமான காரியம். அப்படி இந்த விருதை வாங்க போவது யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்