வெளியானது 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை ; மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

0
109
T20 Worldcup 2022 Schedule

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருடன் தான் சர்வதேச டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார் கோலி. அதனால் கோலியை வெற்றியுடன் அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் அந்த தொடரில் இருந்து வெளியேறியது. குறிப்பாக எப்போதும் தோற்காத பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய அணி. மேலும் நியூசிலாந்து அணிக்கு இடமும் தோல்வியைச் சந்திக்க தொடரில் இருந்து வெளியேற நேர்ந்தது.

இந்தத் தொடர் முடிந்ததும் புதிய கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டார். போகி தலைமையில் ஏற்கனவே ஐந்து முறை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த அனுபவம் அடுத்த உலகக் கோப்பை தொடருக்கு நிச்சயம் உதவும் என்று பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். இந்நிலையில் அடுத்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது.

தகுதிச்சுற்று முடிவடைந்து சூப்பர் 12 சுற்றிய முதல் போட்டியில் கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு பிரிவிலும் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் இன்னொரு பிரிவிலும் இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.

சிட்னி மைதானத்தில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி சூப்பர் 12 சுற்று தொடங்க உள்ளது. இதற்கு அடுத்த நாளே இந்திய அணி பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்தியா பாகிஸ்தான் தவிர கடந்த தொடரின் அரையிறுதியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியும் இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றில் அரங்கேற உள்ளது. இந்தப் போட்டி பிரிஸ்பன் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இறுதிப் போட்டி வரும் நவம்பர் 13ஆம் தேதி நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்ற இந்திய அணி மிகவும் மோசமாக தோல்வியுற்று வெளியேறியது. இந்த முறை புதிய கேப்டன் தலைமையில் செல்லும் இந்திய அணி அந்த தோல்விக்கு பழி தீர்த்து கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.