ஐபிஎல்

புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு – டி20ஐயில் இந்தியா முதல் இடம் ; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள இங்கிலாந்து அணி

2021-2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசி தரவரிசைப் புள்ளி பட்டியல் சற்று முன்னர் வெளியானது. இந்திய அணி டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியும், ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியும் முதல் இடத்தை பிடித்திருக்கின்றன.

- Advertisement -
டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியல்

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 128 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர் வெற்றிகளை குவித்து வரும் பட்சத்தில், அந்த அணியின் டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் கணிசமாக கூடியுள்ளன.

119 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 3-வது இடத்திலும், 110 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா அணி 4-வது இடத்திலும், 93 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 5வது இடத்திலும் இருக்கின்றது.6ஆவது இடத்தில் இங்கிலாந்து அணி 88 புள்ளிகளுடன் இருக்கிறது. கடந்த 27 வருடத்தில் இங்கிலாந்து அணி பெறும் குறைந்தபட்ச டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் இதுவாகும்.

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல்

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 124 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 107 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும்,105 புள்ளிகளுடன் இந்திய அணி 4-வது இடத்திலும், 102 புள்ளியுடன் பாகிஸ்தான் அணி 5வது இடத்திலும், 99 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி 6வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியல்

கடந்த ஆண்டு நடந்த முடிந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கு பின்னர், ரோஹித் ஷர்மா தலைமையிலான புதிய இந்திய அணியின் டி20 போட்டிகளில் நிறைய விளையாடியது. அவை அனைத்திலும் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.அதன் காரணமாக இந்திய அணியின் டி20 தரவரிசை புலிகள் கணிசமாக கூடியுள்ளன. அதன்படி 270 புள்ளிகளுடன் இந்திய அணி தற்போது நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது.

265 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 261 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் 3-வது இடத்திலும், 253 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா அணி 4-வது இடத்திலும், 251 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 5வது இடத்திலும், 250 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 6வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by