உலக டி20 அணி கேப்டனாக சூரியகுமாரை அறிவித்த ஐசிசி.. இன்னும் 3 இந்திய வீரர்களுக்கு இடம்

0
779
ICC

ஐசிசி கடந்த வருடத்திற்கான தனது டி20 அணியை அறிவித்திருக்கிறது. இதில் சூரியகுமார் உடன் சேர்த்து மொத்தம் நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதில் இந்திய வீரர்கள் தவிர்த்து கடந்த ஆண்டின் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து இரண்டு சதங்கள் விளாசிய இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் இடம் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

உலக பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் லீக்குகளில் மட்டுமில்லாமல் வெஸ்ட் இண்டிஸ் அணிக்காகவும் அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிக்கோலஸ் பூரன், ஹாங்காங் அணிக்காக விளையாடி தற்பொழுது நியூசிலாந்து வேலைக்காக விளையாடி வரும் மார்க் சாப்மேன் ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மேலும் சிறிய நாடுகளில் இருந்து ஜிம்பாவே அணியின் சிக்கந்தர் ராஸா, அல்பேஸ் ராம்ஜனி மற்றும் அயர்லாந்தின் மார்க் அடைர், ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் ந்கர்வா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மேலும் இவர்களுடன் துவக்க ஆட்டக்காரர் இடத்தில் இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், மற்றும் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் மேலும் இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் ஆச்சரியமான பேட்டிங் முறையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இந்த காரணங்களால் அவரை ஐசிசி உலக டி20 அணிக்கு கேப்டனாக அறிவித்திருக்கிறது.

2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலக அணி :

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரன், மார்க் சாப்மேன், சிக்கந்தர் ராசா, அல்பேஷ் ரம்ஜானி, மார்க் அடேர், ரவி பிஷ்னோய், ரிச்சர்ட் ந்கரவா, அர்ஷ்தீப் சிங்.