பேப் 4 வீரர்களில் சிறந்த மற்றும் மோசமான கேப்டனை தேர்ந்தெடுத்துள்ள இயான் சேப்பல்

0
1097
Ian Chappell

சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் முடிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியுள்ளது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 4-0 என்கிற கணக்கிலும், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்கிற கணக்கில் தோல்வியடைந்த்தது.

இந்திய அணி தோல்வி அடைந்தவுடன், விராட் கோலி தான் இனி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடரப் போவதில்லை என்று அதிகாரபூர்வமாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த இரு வீரர்கள் மத்தியில் ஒரு அணியை தலைமை தாங்குவதல் விராட் கோலி தான் சிறந்த வீரர் என்றும், கோலியை ஒப்பிட்டு பார்க்கையில் ஜோ ரூட் விராட் நல்ல கேப்டன் இல்லை என்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் சேப்பல் தற்போது கூறியுள்ளார்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி நிறைய வெற்றிகளை கண்டுள்ளது

இதுபற்றி விளக்கமாக பேசியுள்ள அவர், “விராட் கோலி தலைமையில் இந்திய அணி நிறைய வெற்றிகளை குறிப்பாக வெளி மண்ணில் வரலாற்று வெற்றிகளை ருசி கண்டுள்ளது. ஆனால் சமீபத்தில் ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி நிறைய தோல்விகளை தள்ளி வருகிறது.

குறிப்பாக கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் அவரது தலைமையிலான இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய அளவில் சொதப்பியது. முதலில் இந்தியாவில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-3 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது.பின்னர் இங்கிலாந்து மண்ணில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 1-2 என்கிற கணக்கில் பின் தங்கியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தாலும், அதற்கு முந்தைய வருடங்களில் இந்திய அணி அவரது தலைமையில் கண்ட வெற்றிகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு அணியை தலைமை தாங்கும் கேப்டனாக ஜோ ரூட் விராட் கோலியை ஒப்பிட்டு பார்க்கையில் நல்ல கேப்டன் இல்லை என்று இயான் சேப்பல் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கண்ட தோல்வி அவரை மனதளவில் சோர்வடைய செய்து உள்ளது

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 1-2 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் விராட் கோலியையும் மனதளவில் சோர்வடையச் செய்து உள்ளது. டெஸ்ட் தொடரின் இடையில் நடந்த ஒரு போட்டியில் ( இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ) அவர் அணியில் இடம் பெறாததும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி அடைந்த அந்த தோல்வி அவரை மனதளவில் ஏமாற்றியுள்ளது என்று சேப்பல் தற்பொழுது கூறியுள்ளார்.