ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன் ; டோஸ்ட் செய்யாத சாண்ட்விச் தான் உணவு – கடந்து வந்த பாதையை நினைவு கூறும் ஹர்ஷல் பட்டேல்

0
88
Harshal Patel RCB

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிக சிறப்பாக பந்துவீசி மொத்தமாக 32 விக்கெட்டுகளை ஹர்ஷால் பட்டேல் கைப்பற்றினார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பர்ப்பிள் நிற தொப்பியும், ட்ரீம் 11 கேம் சேஞ்சர் விருதும், மிக மதிப்பு மிக்க வீரர் விருதையும் இவர் வென்றார்.

கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய காரணத்தினால் மீண்டும் பெங்களூரு அணி இவரை பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் கைப்பற்றியது. 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இவரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
ஒரு நாளைக்கு 35 டாலர் வருமானத்தில் உழைத்திருக்கிறேன்

சமீபத்தில் ஒரு உரையாடலில் ஹர்ஷால் பட்டேல் தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். நியூஜெர்சியில் உள்ள எலிசபெத்தில், பாகிஸ்தானை சேர்ந்த நபருக்கு சொந்தமான ஒரு வாசனை திரவிய கடையில் நான் வேலை செய்திருக்கிறேன். காலையில் 9 மணி முதல் இரவு எட்டு மணிவரை உழைப்பேன். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் உழைப்பேன். ஒரு நாளுக்கு கூலியாக எனக்கு முப்பத்தி ஐந்து அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

நான் ஆங்கில வழியில் படிக்கவில்லை. என்னுடைய சொந்த மொழியயான குஜராத் மொழியில் தான் படித்தேன். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் பேச வராது. பின்னர் நாட்கள் செல்லச் செல்ல நான் ஆங்கில மொழியை கற்றுக் கொண்டேன் அது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. அங்கே மக்கள் வெள்ளிக்கிழமையில் வந்து 100 டாலர் மதிப்புடைய வாசனை திரவியத்தை வாங்கிச் செல்வார்கள். பின்னர் திங்கட்கிழமை வந்து “இந்த வாசனை திரவியம் நல்ல நிலையில் இல்லை. ஸ்பிரே செய்தால் வாசனை திரவியம் வரமாட்டேங்குதே”, என்று கூறுவார்கள்.அங்கே எனக்கு தொழில் பற்றிய அனுபவம் நிறைய கிடைத்தது.

என்னுடைய அத்தையும் மாமாவும் காலையில் வேலைக்குச் செல்லும் பொழுது என்னை ஏழு மணி அளவில் ட்ராப் செய்து விட்டு போவார்கள். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும் என்று ஹர்ஷால் பட்டேல் கூறியுள்ளார்.

- Advertisement -
டோஸ்ட் செய்யப்படாத சாண்ட்விச்சை தான் சாப்பிடுவேன்

நான் குஜராத் அணிக்காக ஜூனியர் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். என்னுடைய பெற்றோர்களிடம் நான் கிரிக்கெட் வீரராக வேண்டுமென்ற என்னுடைய ஆசையை தெரிவித்தேன். என்னுடைய ஆசையை புரிந்துகொண்டு அவர்கள் என்னை நம்பி இங்கே விட்டு அவர்கள் அமெரிக்காவுக்கு சென்றார்கள். அவர்கள் செல்லும் பொழுது ஒரே ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார்கள். “மோசமான நிலைக்கு தள்ளும் எதையும் செய்ய கூடாது”என்பதே அச்செய்தி. அதை நான் தற்பொழுது வரை என் மனதிற்குள் வைத்திருக்கிறேன்.

மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் அதிகாலையில் சென்று 2-3 மணிநேரங்கள் நாள் பயிற்சி எடுப்பேன். அங்கே வெளியில் ஒரு சாண்ட்விச் கடை இருக்கும். அங்கே டோஸ்ட் செய்யப்பட்ட சாண்ட்விச் 15 ரூபாய், டோஸ்ட் செய்யப்படாத சாண்ட்விச் ஏழு ரூபாய். செலவைக் கருத்தில் கொண்டு நான் எப்பொழுதும் டோஸ்ட் செய்யப்படாத சாண்ட்விச்சை தான் சாப்பிடுவேன்.

இவ்வாறு தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்து ஹர்சால் பட்டேல் அந்த உரையாடலில் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் அவர் 9 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருடைய பவுலிங் எக்கானமி 7.68 ஆக உள்ளது.