இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்று, டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்து, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று லண்டன் நகரின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற இந்திய அணா கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தேடுத்து இருக்கிறார். இடுப்பு வலி இருப்பதால் விராட் கோலி விளையாடவில்லை. ஸ்ரேயாஷ் ஐயர் நம்பர் 3-ல் களமிறங்குகிறார். பும்ரா, ஷமி, பிரசித் கிருஷ்ணா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களோடு இந்திய அணி களமிறங்குகிறது. ஸ்பின்னர்களாக சாஹல், ஜடேஜா இருக்கிறார்கள். ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யாவும், மிடில் ஆர்டரில் சூர்யகுமார், ரிஷாப் பண்ட் ஆகியோரும், துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருக்கிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து அணியில் டி20 தொடரில் இடம்பெறாத ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் இணைந்திருக்கிறார்கள். மேலும் ஜோ ரூட்டும் வந்திருக்கிறார். பிரைடன் கார்ஸ் என்ற வேகப்பந்து வீச்சாளர் இடம்பெற்று இருக்கிறார். இயான் மார்கனின் ஓய்வுக்குப் பிறகு, ஜோஸ் பட்லர் கேப்டனாக இங்கிலாந்து அணியை வழிநடத்துகிறார். அணியின் பலம் என்று பார்த்தால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் யூனிட் மிக வலிமையாய் இருக்கிறது. அதேவேளையில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் வலிமையாக இருக்கிறது.

இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்தப் போட்டி குறித்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சில முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். அவர் “தட்டையான ஆடுகளங்களில் இங்கிலாந்து மிக வலிமையான அணி. சமீபத்தில் நெகர்லாந்து அணியுடன் 498 ரன்கள் அடித்திருந்தார்கள். ஆனால் இந்திய அணியுடன் இவ்வளவு ரன்களை அடிக்கவில்லை என்றாலும், 400 ரன்களை இங்கிலாந்து அணி அடித்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் கூறிய மைக்கேல் வாகன் “ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ மூவரும் அணிக்குத் திரும்புவார்கள். இது இங்கிலாந்து அணியை வலிமைப்படுத்தும். மேலும் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் கவனம் ஈர்ப்பவராக இருக்கிறார். அவர் க்ளிசன் போல பந்து வீச்சு கோணங்களைக் கொண்டிருக்கிறார். எனவே அவர் இந்தத் தொடரில் ஓரிரு ஆட்டங்களில் வாய்ப்பு பெறலாம்” என்று கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருந்தது போலவே இங்கிலாந்து அணியின் ப்ளேயிங் லெவன் அமைந்திருக்கிறது!

- Advertisement -