“வெளிப்படையாவே சொல்றேன்.. சிறந்த வீரர் சச்சின் கிடையாது விராட் கோலிதான்..!” – உஸ்மான் கவாஜா ஓபன் ஸ்டேட்மென்ட்!

0
2114
Virat

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் இன்னும் உற்சாகமாக மாற ஆரம்பிக்கும் என்று நம்பலாம்!

இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியை வீழ்த்தி சிறிது ஆச்சரியத்தை கொடுத்தது நியூசிலாந்து. இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது சுவாரசியத்தை அதிகப்படுத்தியது.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பையின் மிக முக்கியமான போட்டியில் ஒரு தலைப்பட்சமாக பாகிஸ்தானை இந்தியா வென்றது இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை உலகக் கோப்பை தொடர் மீது உருவாக்கியது.

இந்த நிலையில் நேற்று இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது, நடப்பு உலகக் கோப்பை தொடர் சாதாரணமாக நடந்து முடிந்து விடாது என்பதை உணர்த்தியது. நடப்பு உலக கோப்பையில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் இந்திய நட்சத்திரம் விராட் கோலி இரண்டு முக்கிய அரை சதங்கள் உடன் சிறப்பாக இருக்கிறார்.

அவர் குறித்து தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் உஸ்மான் கவாஜா கூறும்பொழுது “ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி சிறந்தவர் என்று நான் கூறப்போகிறேன். புள்ளி விபரங்களை பார்த்தால் அவர் பெற்றுள்ள சதங்களுக்கு மிகக் குறைவான போட்டிகளே விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் நான் வளர்ந்த காலத்திற்கான ஒரு அளவுகோல். ஆனால் இப்பொழுது விராட் கோலி கிரிக்கெட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதை எப்பொழுதும் யாருமே செய்தது கிடையாது!” என்று விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் மிக வெளிப்படையாக விராட் கோலி பற்றி கூறியிருக்கிறார்.

இந்திய அணி வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி புனே மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. தற்பொழுது இந்திய அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும், அபாரமான முறையில் வெற்றி பெற்று நல்ல ரன் ரேட் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்தியா விளையாடிய மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியுடன் போட்டியில் விராட் கோலிக்கு சதம் அடிப்பதற்கான வாய்ப்பு மிக எளிதாக இருந்தது. துரதிஷ்டவசமாக அவர் 85 ரன்கள் ஆட்டம் இழந்தார். சச்சினின் ஒரு நாள் கிரிக்கெட் சதசாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் மூன்று சதங்கள் தேவைப்படுகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அது முடிவுக்கு வந்தால் இந்திய அணிக்கு அது மிகச் சிறப்பானதாக இருக்கும்!