“நான் மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்கிறேன்”!- ரோஹித் சர்மா பேட்டிங் பற்றி இர்பான் பதான் கருத்து!

0
2288

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது முதல் இரண்டு ஆட்டங்களையும் கைப்பற்றிய இந்திய அணி தொடரை ஏற்கனவே வென்று விட்டது . மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியானது வருகின்ற 24ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்க இருக்கிறது .

நேற்று நடந்து முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். குறைவான ஸ்கோரை சேஸ் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார் .

ரோஹித் சர்மா 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இந்திய அணி நியூசிலாந்து அணி நிர்ணயித்த 109 ரண்களை 20.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு எட்டி வெற்றி பெற்றது . இந்தப் போட்டி குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை மிகவும் பாராட்டி பேசி உள்ளார்.

ரோஹித் சர்மாவின் டேட்டிங் பற்றி பேசிய இர்பான் பதான் ” ரோஹித் சர்மாவின் பார்ம் பற்றி நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை என நான் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறேன் . நேற்றைய போட்டியில் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது பேட்டிங் செய்து தனது முதல் அரை சதத்தை பதிவு செய்திருக்கிறார் . இந்த அரைசகமானது அவருக்கு சரியான நேரத்தில் வந்திருக்கிறது . நேற்றைய பேட்டிங்கின் போது அவர் ஒரே ஒரு தவறை மட்டும் தான் செய்தார் . மற்றபடி அவரது ஒவ்வொரு ஷாட்களும் மிகவும் அற்புதமாக இருந்தது” என்று கூறியுள்ளார் .

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி உள்ள அவர் “மின்னொளியில் அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல . இரவில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது . முதலில் தனது நேரத்தை சிறிது எடுத்துக் கொண்ட ரோகித் அதன்பிறகு தனது வழக்கமான சாட்களை ஆடத் தொடங்கினார் . நேற்றைய போட்டியில் அவர் அரைசதம் அடித்து விட்டார் வெகு விரைவிலேயே அவரிடமிருந்து ஒரு பெரிய ஸ்கோரை நாம் எதிர்பார்க்கலாம்” என்று கூறினார் .

“நேற்றைய போட்டியில் மட்டுமல்ல காயத்திலிருந்து மீண்டு வந்ததிலிருந்தே ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். நேற்றைய போட்டியில் அவர் ஆடிய விதம் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டு எந்தப் பந்துகளை அடிக்க வேண்டும் எந்த பந்துகளை விட வேண்டும் என ஒரு தெளிவான சிந்தனையோடு கேப்டன் ஆடினார். உலகக்கோப்பை நடைபெற இருக்கின்ற இந்த ஆண்டில் கேப்டன் ரோஹித் சர்மாவின் பார்ம் இந்திய அணிக்கு மிக முக்கியமானது . அவர் தன்னுடைய பார்மை தொடர்ந்து இனி வரும் போட்டிகளில் அதிகப்படியான ரண்களை குவிப்பார்” என்று கூறி முடித்தார் இர்பான் பதான்