தோனி சொல்லிக்கொடுத்த மாதிரி தான் கொல்கத்தாவுக்கு விளையாட போறேன் – ஜெகதீசன் சிறப்பு பேட்டி!

0
1570
ms dhoni jegatheesan

2022 23 ஆம் ஆண்டிற்கான இந்திய அணியின் உள்நாட்டு சீசன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ரஞ்சித் தொடரின் இரண்டு சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அன்று ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் நடைபெற்றது . இதில் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாது இந்திய அணியின் உள்நாட்டு வீரர்களும் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

இதற்கு முன்பு நடந்த இளங்களில் எல்லாம் அனுபவ வீரர்களை அதிக விலைக்கு வாங்கப்பட்டனர் . ஆனால் இந்த வருட ஏலத்தில் இளம் வீரர்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளனர் . டி20 கிரிக்கெட் ஆனது இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு போட்டியாகவே பார்க்கப்படுவதால் இளம் வீரர்களுக்கு அதிக அளவில் டிமாண்ட் இருந்தது .

- Advertisement -

இந்தியா அணியின் இளம் வீரர்கள் பலர் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர் அவர்களின் முக்கியமானவர் நாராயணன் ஜெகதீஷன். தமிழ்நாடு அணிக்காக ஆடிவரும் இவர் ஐபிஎல் தொடர்களில் சி எஸ் கே அணிக்காக ஆடிவந்தார்.

நான்கு வருடங்களாக அணியில் இருந்தும் இவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த வருடம் சிஎஸ்கே அணியிலிருந்து இவர் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் தமிழக அணிக்காக அருமையாக விளையாடி இவர் ஐந்து சதங்கள் உட்பட 823 ரண்களை எடுத்தார் இவர் அதிகபட்ச ஸ்கோர் 277 ஆகும் .

இதனால் இந்த வருடம் இனிய நேரத்தில் ஐபிஎல் அணிகளின் கவனம் இவர் பக்கம் திரும்பியது . ஆரம்ப விலையாக 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்த இவருக்கு 90 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி .

- Advertisement -

இது பற்றி கருத்து தெரிவித்த ஜெகதீசன் நான் கொல்கத்தா அணிக்காக ஆடும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு வீரருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பங்களிப்பு அளிக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும் அதே போன்று தான் ஐபிஎல் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது . நிச்சயமாக நான் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்த ஐபிஎல் தொடரில் அதிகமான போட்டிகளில் ஆடுவேன் என்று எதிர்பார்ப்பது என கூறினார்.

பற்றி தொடர்ந்து பேசி அவர் சிஎஸ்கே அணி இருக்கும்போது எம் எஸ் தோனி இடம் இருந்து நிறைய அறிவுரைகளைப் பற்றி இருக்கின்றேன் அவை என் கிரிக்கெட் வாழ்விற்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும் . அவரிடம் இருந்து நான் கற்ற பாடங்களை என்னுடைய ஆட்டம் முறையில் செயல் வடிவில் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுவேன் என்று கூறியுள்ளார்