அடிச்சா சிக்ஸ் தான்னு நினைக்கிற என்னையே, இந்த பிட்ச்ல பவுண்டரி அடிச்ச போதும்டா சாமின்னு நினைக்க வச்சிட்டாங்க – கைல் மேயர்ஸ் பேட்டி!

0
484

அடித்தால் சிக்ஸர்களாக அடிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கும் நான், இந்த பிட்ச்சில் சிக்ஸரை விட பவுண்டரி அடித்தால் போதும் என்கிற அளவிற்கு கடினமாக இருந்தது என்று போட்டி முடிந்த பிறகு கைல் மேயர்ஸ் பேசியுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், லக்னோ அணிக்கு ஓபனிங் பேட்டிங் இறங்கிய கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் நிதானமான துவக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

கேஎல் ராகுல் 39 ரன்கள் அடித்து முதல் விக்கெட்டை இழந்தார். கைல் மேயர்ஸ் வழக்கமான ஆட்டமாக இல்லாமல் இப்போட்டியில் ஸ்லோவாகவே 51 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் மிகச்சிறப்பாக அமைந்தது. ஜெய்ஷ்வால் 35 பந்துகளில் 44 ரன்கள் அடித்து நல்ல ஆரம்பத்தை கொடுத்துச்சென்றார். பட்லர் இப்போட்டியில் வழக்கத்திற்கு மாறாக மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 41 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ஸ்டாய்னிஸ் ஓவரில் அவுட்டானார்.

சஞ்சு சாம்சன் ரன் ஆனப்பின், படிக்கல் மற்றும் ரியான் பராக் இருவரும் சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்தும் பலனில்லாமல் போனது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பவுலிங்கில் கலக்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இப்போட்டியில் லக்னோ அணிக்கு நிதானமான துவக்கம் கொடுத்து அரைசதம் அடித்த கைல் மேயர்ஸ் போட்டி முடிந்த பின் பேசுகையில்,

“சொந்த மைதானத்தில் இருந்து வெளி மைதானத்தில் விளையாடும் பொழுது வெற்றி பெறுவது மிகவும் அவசியம். இந்த வெற்றிக்காக எங்களுக்கு நாங்களே நிறைய அழுத்தம் கொடுத்துக் கொள்வோம். சர்வதேச போட்டிகளை விளையாடிவிட்டு நேரடியாக இந்த ஐபிஎல் தொடருக்கு வந்திருக்கிறேன். நான் விளையாடியதில் இந்த பிட்ச் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

வழக்கமாக சிக்ஸர்கள் அடிக்க முனையும் நான் இந்த பிட்ச்சில் சிக்ஸர்களை விட பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த அளவிற்கு இங்கு ஹிட்டிங் விளையாட கடினமாக இருந்தது. பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள துவக்கத்தில் சில பந்துகளை எடுத்துக் கொண்டேன். ஆங்காங்கே ஸ்லோவாக வந்தது. ஆங்காங்கே சிறிய அளவில் பவுன்ஸ் ஆனது. இதனை புரிந்துகொண்டு கட்டுப்படுத்தி விளையாடுவதற்கு முற்றிலும் கடினமாகவும் இருந்தது.” என்று பிட்ச்சை பற்றி விமர்சித்தார்.