அஸ்வின் எப்படி ஆசியகோப்பை அணிக்குள் வந்தார்? அவரோட ரெக்கார்ட் சொல்லுகிற அளவுக்கு இல்லையே – கேள்வி எழுப்பிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்!

0
172

அஸ்வின் எப்படி ஆசிய கோப்பை தொடருக்கு செல்லும் இந்திய அணிக்குள் வந்தார் என தேர்வு குழுவின் முன்னாள் சேர்மன் கிரண் மோரே கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசியக் கோப்பை தொடர் ஆகிய அரபு அமீரகத்தில் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான இந்திய அணி கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்று இருக்கின்றனர். நன்றாக செயல்பட்டு வந்த அக்சர் பட்டேல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இந்திய அணி இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுடன் இத்தொடரில் களமிறங்குகிறது. யுஸ்வேந்திர சஹல் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாகவும், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, தீபக் ஹூடா ஆகியோர் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர்.

பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இரண்டு முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக இத்தொடரில் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக ஆவேஷ் கான் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகிய இரண்டு இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். இந்திய தேர்வு குழுவின் முன்னாள் சேர்மன் கிரண் மோரே, ஆசிய கோப்பைக்குச் செல்லும் இந்திய அணியில் முகமது சமி இடம்பெறாதது குறித்தும், ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படி ஆசிய கோப்பைக்கு செல்லும் இந்திய அணிக்குள் நுழைந்தார் என்பது குறித்தும் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

“எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எப்படி அஸ்வின் இந்திய டி20 அணிக்குள் எடுக்கப்படுகிறார்? அவரது ஐபிஎல் ரெக்கார்டு சொல்லும் அளவிற்கு இல்லை. அந்த இடத்தில் முகமது சமி இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அக்சர் பட்டேல் சரியான வீரராக இருப்பார். முகமது சமி, புது பந்து மற்றும் டெத் ஓவர்களில் அபாரமாக வீசக் கூடியவர். மிடில் ஓவர்களிலும் பல நேரங்களில் ரன்களை கட்டுப்படுத்தக்கூடியவர். ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். நிச்சயம் அவருக்கு ஆசிய கோப்பை டி20 அணியில் இடம்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்றார்.

- Advertisement -

கிரண் மோரே போன்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் இதே கருத்தினை முன் வைத்திருக்கின்றனர்.

“எனக்கு ஒவ்வொரு முறையும் இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. ஏன் அவரை வெளியில் அமர்த்திவிட்டு நன்றாக ஆடிவரும் வீரரை எடுக்கவில்லை. இங்கிலாந்து தொடரில் அஸ்வின் இடம்பெறவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் இருந்தார். தற்போது ஆசிய கோப்பை தொடரில் இருக்கிறார். அவர் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். ஜடேஜா முதன்மையான ஸ்பின் ஆல் ரவுண்டர், அதற்கு அடுத்ததாக சஹல் அல்லது அக்சர் பட்டேல் ஆகியோரில் ஒருவர் இடம்பெற வேண்டும். சகல் நிச்சயம் இடம் பெற வேண்டும் ஏனெனில் அவர் ரிஸ்ட் ஸ்பின்னர். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் சுழல் பந்துவீச்சாளர்களின் இடம் குறித்து எனக்கு சந்தேகம் வருகிறது.” என்று கிரண் மொரே தெரிவித்தார்.