” என்னுடைய நுரையீரல் சின்னது ; சாவின் விளிம்பில் தவித்தேன் ” – ஆஸ்த்மா நோயால் பாதிக்கப்பட்டும் சாதனை படைத்த ஸ்டூவர்ட் பிராடின் ஊக்கமளிக்கும் கதை

0
82
Stuart Broad

இந்த இங்கிலாந்து வீரரின் பேரைக் கேட்டாலே பல இந்திய கிரிக்கெட் இரசிகர்களின் நினைவில் வருவது, 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையும், இவரது ஒரே ஓவரேல் ஆறு சிக்ஸர்களை யுவராஜ் சிங் அடித்து நொறுக்கியதும்தான்.

ஆனால் ஸ்டூவர்ட் பிராட் இதையெல்லாம் தாண்டி நினைவுகூரத்தக்க மிக வெற்றிக்கரமான ஒரு வீரர். தனது நாட்டின் சக வேகப்பந்து வீச்சாளரோடு, பந்துவீச்சில் பார்ட்னர்ஷிப் போட்டு 1000 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமான சாதனையைப் படைத்திருக்கும் வீரர். இவர்கள் இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட்டில் கழித்துவிட்டால் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் சிறப்பான வெற்றிகள் என்று பல வெற்றிகளே இருக்காது என்று உறுதியாய் கூறலாம்.

- Advertisement -

36 வயதான ஸ்டூவர்ட் பிராட் முதன் முதலில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அடுத்து அதே ஆண்டு அதே ஆகஸ் மாதம் 30ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2007ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்காக முதன் முதலில் சர்வதேச போட்டியில் களம் கண்டார்.

156 டெஸ்ட் போட்டிகளில் 288 இன்னிங்ஸ் ஆடியுள்ள ஸ்டூவர்ட் பிராட் 552 விக்கெட்டுகளையும், 3473 ரன்களையும், ஒரு சதம் மற்றும், 13 அரைசதங்களை அடித்திருக்கிறார்ர். 121 ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், 56 டி20 போட்டிகளில் 55 இன்னிங்ஸில் 65 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

தற்போது அவரைப்பற்றி ஒரு உருக்கமான தகவலை அவர் கூறியிருக்கிறார். அதைக் கேட்பதற்குப் பாவமாக இருந்தாலும், அதைத்தாண்டி அவர் சாதித்துள்ளது குறித்து வியப்பாய் இருக்கிறது. அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால்; “நான் பிறக்கும் போது மிகச் சிறியவனாக இருந்தன். மரணத்தின் வாசலில் இருந்தேன். இரண்டு நுரையீரல்களில் ஒன்று முழுமையாக வளர்ச்சியடையவில்லை. இதனால்தான் நான் ஆஸ்துமா நோயாளியாக இருக்கிறேன். இன்ஹேலரை எங்கும் எடுத்துச் செல்கிறேன். எல்லாரையும் விட பாதியளவு வேலை செய்யும் நுரையீரலைப் பெற்றிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -