இந்திய அணியின் இந்த மாற்றம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது – இயான் மோர்கன் பரபரப்பு பேட்டி!

0
4133
Rohitsharma

டி20 உலகக் கோப்பை முடிவடைந்த நிலையில் எல்லா அணிகளும் தற்பொழுது 50 ஓவர் உலக கோப்பைக்காக தங்களை தயார்படுத்த துவங்கிவிட்டன. 20 ஓவர் உலகக் கோப்பை முடிந்து இரண்டு மாதங்களை நெருங்குகின்ற போதிலும் இந்திய அணி அரையிறுதியிலிருந்து தோல்வியுற்று வெளியேறியது இந்திய ரசிகர்களால் இன்னும் மறக்க முடியாது .

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது பாகிஸ்தான் அணியுடன் பத்தி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததும் 2022 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது அரை இறுதியில் இங்கிலாந்து அடியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததும் கரும்புள்ளியாகவே இருக்கிறது .

இந்திய அணியின் டி20 ஆட்டம் குறித்து ஏராளமான விமர்சிகர்களும் முன்னால் வீரர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர் இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடிய விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் .

இது பற்றி பேசி உள்ள அவர் “இந்திய அணி உலக கோப்பையில் ஆடிய விதத்தை பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது . அவர்கள் உலக கோப்பைக்கு முன்பு வரை டி20 கிரிக்கெட்டில் பின்பற்றி வந்த தாக்குதல் பாணி ஆட்டத்தை ஏன் கைவிட்டார்கள் என்று தெரியவில்லை” என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய மோர்கன் “இந்திய அணி உலகக்கோப்பை அரை இறுதியில் ஆட்டத்தை அணுகிய விதம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஏனென்றால் அவர்கள் இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக ஆக்ரோஷமான தாக்குதல் பாணி ஆட்டத்தை தான் டி20 போட்டிகளில் கடைபிடித்து வந்தனர் ஆனால் ஏன் அவர்கள் தங்களது ஆட்டம் முறையை மாற்றினார்கள் என்று தெரியவில்லை” என்று கூறினார் .

இதனைத் தொடர்ந்து பேசிய மோர்கன் “இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது அவர்கள் கடைப்பிடித்த தாக்குதல் பாணி ஆட்டம் ஆனது மிகவும் உற்சாகமாக இருந்தது இந்த ஆட்ட முறைக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை எல்லோரும் பாராட்டினோம் . ஆனால் இந்த உலகக் கோப்பையில் அவர்கள் தங்கள் பழைய படி ஆட்டத்திற்கு திரும்பியது மிகவும் எதிர்பார்க்காதது மற்றும் வருத்தமான ஒன்று” என்று கூறி முடித்தார் மோர்கன்