‘மேன் ஆப் தி மேட்ச்’ விருது வாங்கினால் என்ன இதைத்தான் பேச வேண்டும் என்று நான் நினைத்தேன் – அர்ஷதீப் சிங் பேட்டி!

0
960

ஆட்டநாயகன் விருது பெற்றால் இதைத்தான் பேச வேண்டும் என்று நான் முன்னரே யோசித்து வைத்திருந்தேன் என பேசினார் ஆட்டநாயகன் அர்ஷதீப் சிங்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். துவக்கம் முதலே தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹர் மற்றும் அர்ஷதீப் சிங் இருவரும் இன்-ஸ்விங் அவுட்-ஸ்விங் வீசி திணறடித்து விக்கெட் வீழ்த்தினர்.

- Advertisement -

அர்ஷதீப் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாபிரிக்காவை கதிகலங்க செய்தார். தீபக் சஹர் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, 8 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து விட்டது. எய்டன் மார்க்ரம் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து வேகப்பந்து வீச்சாளர் பார்னல் மற்றும் கேசவ மகராஜ் இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க அணியை மீட்டெடுக்க முயற்சி செய்தனர். இதில் கேசவ் மகராஜ் மட்டும் 41(35) ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 107 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். அஸ்வின் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல், 4 ஓவர்கள் வீசி பெரும் 8 ரன்கள் மட்டுமே தந்தார்.

எளிய இலக்கை துரத்துவதற்கு களமிறங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் மிகவும் சோதனையை தந்தனர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் பொறுமையாக விளையாட, சூரியகுமார் யாதவ் அதிரடியில் வழக்கம்போல் மிரட்டினார். கே எல் ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடக்கம். இறுதியில் இந்திய அணி 16.4 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை டிரைவர் சீட்டில் உட்கார வைத்த அர்ஷதீப் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் அப்போது பேசிய அவர் கூறுகையில்,

“ஆட்ட நாயகன் விருது கிடைத்தால் என்ன பேசவேண்டும் என்று முன்னரே யோசித்திருந்தேன். (ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்து பற்றி பேசிய அவர்) முதல் ஓவரில் தீபக் பாய் நன்றாக கட்டுப்படுத்தி வைத்திருந்தார். அது எனக்கு சாதகமாக அமைத்தது பிட்சின் மேற்பரப்பில் புற்கள் இருந்ததால், ஸ்விங் ஆவதற்கு ஏதுவாக இருந்தது. அதை வைத்து சரியான பகுதிகளில் பந்து வீசுவதே எங்களது திட்டம். 3 விக்கெட்டுகளில் மில்லரின் விக்கெட்டை வீழ்த்தியபோது நான் ரசித்தேன். அவர் ஒரு அவுட்-ஸ்விங்கரை என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்று நான் நினைக்கிறேன். அதற்கான ஷாட்டை ஆடினார். அதற்கு பதிலாக நான் ஒரு இன்-ஸ்விங்கரை வீசினேன். 

மகாராஜ் விக்கெட்டைப் பெற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் நன்றாக விளையாடினார். அச்சமயம் எங்களது திட்டம் வேறுபட்டது. மீண்டும் எனது பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்ததால் நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். காயத்தில் இருந்தபோது என்சிஏவில் நல்ல பயிற்சி பெற்றேன். மேலும் இதுபோன்ற பங்களிப்பை தொடர்ச்சியாக கொடுப்பேன் என்று நம்புகிறேன்.” என குறிப்பிட்டார்.