கடைசி ஓவர் கடைசி பால்… தோனிக்கு நான் பிளான் பண்ண பால் வேற, வீசிய பால் வேற – சந்தீப் சர்மா பேட்டி!

0
1032

கடைசி ஓவர் கடைசி பந்தில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டபோது, சிறப்பான யார்க்கர் வீசி தோனியை பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்க விடாமல் தடுத்தார் சந்தீப் சர்மா. ஆனால் இது அவர் பிளான் பண்ணிய பந்து யார்க்கர் இல்லையாம். சந்தீப் சர்மா பேட்டியளித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இது சற்று கடினமாக இலக்காக இருந்தாலும், சிஎஸ்கே அணிக்கு களமிறங்கிய துவக்க ஜோடி நீண்ட நேரம் பாட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. நல்ல பார்மில் இருந்தார் ருத்துராஜ் 8 ரன்களுக்கு அவுட் ஆனார்.

அடுத்து ரஹானே சிறிது நேரம் தாக்குப்பிடித்து 31 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் வந்த சிவம் துபெ, ராயுடு மற்றும் மொயின் அலி ஆகியோர் சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

50 ரன்கள் அடித்து களத்தில் நின்ற டேவன் கான்வேயும் தவறான நேரத்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி கடைசி மூன்று ஓவர்களில் 54 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

இருப்பினும் களத்தில் இருந்தது தோனி மற்றும் ஜடேஜா. ஆகையால் சிஎஸ்கே அணி மீது அதீத நம்பிக்கை நிலவியது. அதற்கேற்றாற்போல் 18 மற்றும் 19ஆவது ஓவர்களில் 33 ரன்கள் அடித்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

பேட்டிங் முனையில் இருந்த தோனி இரண்டு சிக்ஸர்கள் அடித்து நம்பிக்கையை கொண்டு வந்தார். மேலும் கடைசி பந்தில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற நிலை வந்தது. பலமுறை கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை பெற்றுத்தந்திருக்கும் தோனி இம்முறையும் செய்வாரா? என்று எதிர்பார்ப்பு நிலவியது.

அந்த நேரத்தில் மிகத்துல்லியமாக யார்க்கர் வீசி பவுண்டரி அடிக்க விடாமல் தடுத்தார் சந்திப் சர்மா. இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு யார்க்கர் குறித்து சந்திப் சர்மா பேட்டியளிக்கையில்,

“என்னுடைய கடைசி மூன்று ஓவர்களிலும் யார்க்கர் வீச வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்போது சரியாக வரவில்லை. கடைசி ஓவரிலும் ஒருமுறை யார்கர் வீச முயற்சித்தபோது அது தவறுதலாக மாறி, தோனி சிக்ஸ் அடித்துவிட்டார். கடைசி பந்தில் 5 ரன்கள் இருந்த போது இந்த நேரத்தில் யார்க்கர் வீசுவது தான் சரி, ஆனால் அது தவறாக முடிந்தால் தோல்வியை சந்திக்க நேரிடும். ஆகையால் வேறு பந்து வீசலாம் என்று திட்டமிட்டு வந்தேன்.

இருப்பினும் என்னுடைய உள்ளுணர்வில் யார்க்கர் வீசவேண்டும் என்று தோன்றியது. ஆகையால் இம்முறை வேறு திசையில் இருந்து யார்க்கர் முயற்சிக்கலாம் என்று வீசினேன். அது மிகச் சிறப்பாக ஈடுபட்டது.” என்றார்.