“என்னை இந்த இந்திய வீரர் ஏமாத்திட்டார்.. எனக்கு ரொம்ப விசித்திரமா இருக்கு!” – ஏபி.டிவில்லியர்ஸ் பேச்சு!

0
1518
Virat

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை சுற்றி, உலகக் கோப்பை தொடர் தொடங்கப்படுவதற்கு முன்பாக உலகமெங்கும் இருந்து முன்னாள் வீரர்களிடம் பல கணிப்புகள் வந்தன.

இதில் பல வீரர்களின் கணிப்புகள் பொய்யாகி இருக்கின்றன. ஏனென்றால் பேட்டிங்கை பொருத்தவரை பலருடைய கணிப்பில் இருந்தது இந்திய அணியின் கில் மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இருவர்தான்.

- Advertisement -

இந்த நிலையில் சிலர் மட்டுமே விராட் கோலி பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார் என்று கூறியிருந்தார்கள். பலர் விராட் கோலியை இந்த உலகக் கோப்பையில் பேட்டிங்கில் அதிக ரன் அடிக்கக்கூடிய பேட்ஸ்மேனாக கணிக்கவில்லை.

இன்னொரு பக்கத்தில் பந்துவீச்சை பொறுத்தவரை முகமது சமியை எந்த ஒரு முன்னால் வீரரும் தங்களுடைய கணிப்பில் கொண்டு வரவே கிடையாது. இந்த உலகக் கோப்பை தொடரில் முகமது சமி ஒரு ஆச்சரியமான வீரர்.

இந்திய அணியின் முகமது சமியை போலவே நியூசிலாந்தின் இளம் இடதுகை பேட்ஸ்மேன் சச்சின் ரவீந்திராவும் ஆச்சரியம் தரக்கூடிய பேட்ஸ்மேனாக இருந்தார்.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா லெஜன்ட் ஏபி.டிவில்லியர்ஸ் இந்திய அணியின் சுப்மன் கில் அதிக ரன்கள் எடுக்கும் வீரராக இருப்பார் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து தற்பொழுது அவர் பேசும் பொழுது “நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆக இருப்பார் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் அவருக்கு இது சிறப்பான உலகக் கோப்பை தொடராக அமையவில்லை. ஆனாலும் கூட அவரால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும். மேலும் பெரிய போட்டிகளிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும்.

இந்நேரத்திற்கு சூரியகுமார் யாதவ் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்திருக்க வேண்டும். அவருடைய பேட்டிங்கில் பலவீனமான பகுதி என்று நான் எதையுமே பார்க்கவில்லை.

இத்தனை காலம் ஆகியும் அவரால் மற்ற வடிவங்களில் தனக்கான வழியைக் கண்டுபிடிக்காமல் இருப்பது குறித்து எனக்கு விசித்திரமாக இருக்கிறது. நாம் ஒரு வடிவத்திற்கு மாற வேண்டும் என்றால் முதலில் அந்த வடிவத்தில் நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும். இந்த இருவரையுமே நான் ஐபிஎல் தொடரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!