நான் ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தேன் – பங்களாதேஷை சரித்த குல்தீப் யாதவ் பேட்டி!

0
776
Kuldeep

மூன்று வடிவத்திலும் இந்திய கிரிக்கெட்டுக்கு தற்போது மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களாக நம்பிக்கை தரும் வகையில் இருப்பது இரண்டே பேர்தான். ஒருவர் சாகல்; இன்னொருவர் குல்தீப் யாதவ்!

இந்த இருவரும் சில வருடங்களுக்கு முன்பு ஜோடி சேர்ந்து இந்திய அணிக்காக எதிரணிகளின் விக்கட்டுகளை வேட்டையாடி வந்தார்கள். இவர்களின் சிறப்பான வருகைக்குப் பிறகு ஜடேஜா அஸ்வின் கூட்டணி உடைந்தது.

- Advertisement -

ஆனால் சில ஆண்டுகளில் இவர்கள் மீது பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்க அதிலிருந்து சாகல் மட்டுமே தப்பிக்க முடிந்தது. குல்தீப் யாதவ் மோசமாக சிக்கிக் கொண்டார். இது மட்டும் அல்லாமல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் அவருக்கு நம்பிக்கை தந்து ஆதரிக்க யாரும் இல்லை. இதனால் அவரால் வெள்ளைப் பந்தில் தன்னை நிரூபிக்க ஐபிஎல் தொடரில் ஒரு வாய்ப்பு அமையாமல் போக அது இந்திய அணிக்குள்ளும் இவரை நுழைய விடவில்லை.

இதற்குப் பிறகு இந்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட இவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. இவர் டெல்லி அணியில் மிக நல்ல ஆதரவை பெற்றார். மீண்டும் தனது பழைய பௌலிங் ஃபார்முக்கு வந்தார். இதை அடுத்து இந்திய அணியில் கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கு கதவுகள் திறக்க ஆரம்பித்தது. ஆனால் டி20 உலகக் கோப்பை அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெற்ற இவர் டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 40 ரன்கள் குவித்த இவர், பந்து வீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷ் அணிக்கு பெரிய சரிவை உண்டாக்கி இருக்கிறார். இவரது பந்து வீச்சு மிகத் தெளிவாக முன்பை விட கூர்மையாக இருப்பது தெரிகிறது!

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள குல்தீப் யாதவ்
” நான் ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தேன். முதல் ஓவரிலேயே முதல் விக்கெட் கிடைக்க நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன். ஓரிரு ஓவருக்கு பிறகு நான் நன்றாக உணர ஆரம்பித்தேன். நான் தொடர்ச்சியாக பந்துகளை கலந்து கலந்து வீசிக் கொண்டிருந்தேன். மேலும் பந்து நன்றாகவும் திரும்பச் செய்தது. நான் என் வழக்கமான பந்துவீச்சில் இருந்து பெரிதாக எதையும் செய்யவில்லை. இப்போது ஒரு வருடம் ஆகிறது நான் எனது விதத்தில் இருக்க முயற்சி செய்தேன். இது வேகமாக வீசவும் பந்தை திருப்பவும் எனக்கு உதவி செய்தது. நான் விக்கெட்டில் இரண்டு புறங்களிலும் பந்து வீச முயற்சி செய்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஏ அணிக்காக இப்படி வீசினேன். தற்போது எனக்கு விக்கட்டை சுற்றி வந்து வீசுவது நன்றாக இருக்கிறது!” என்று கூறியுள்ளார்!