” இந்திய அணி இன்னும் ரன்கள் சேர்த்து 450 ரன்கள் இலக்காக வைத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் ” இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
110
Ben Stokes

இங்கிலாந்தின் தலைசிறந்த பேட்டர்களின் வரிசையில் நிச்சயம் ஜோ ரூட்டிற்கு ஒரு சிறப்பான இடம் கட்டாயம் உண்டு. ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் மிகச்சிறந்த வீரரான அவருக்கு இங்கிலாந்த கிரிக்கெட்டை முன் நின்று வெற்றிக்கரமாக வழிநடத்தி செல்லும் யோகம் அமையவே இல்லை. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு வெற்றிக்கரமான இங்கிலாந்து கேப்டனாக இயான் மோர்கன் வெளிப்பட்டார். அவரின் ஓய்வுக்குப் பிறகு தற்போது கேப்டன் பதவி ஜோஸ் பட்லருக்குச் சென்றுள்ளது. ஜோ ரூட் வசம் இருந்த டெஸ்ட் கேப்டன் பதவியும் தொடர் தோல்விகளால் பறிக்கப்பட்டு பென் ஸ்டோக் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் நீக்கப்பட்டு, பெஸ் ஸ்டோக்சும், தலைமைப் பயிற்சியாளராக பிரன்டன் மெக்கல்லமும் கொண்டு வரப்பட்ட பின், இங்கிலாந்து அணி வேறொரு வடிவிலான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அதாவது ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட்டிற்கு நடுவில் ஒரு தாக்குதல் பாணி கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் புகுத்தி, தொடர்ந்து நான்கு ஆட்டங்களாக 250+ ரன்களை அதிரடியாய் சேஸ் செய்து அசத்தி வருகிறது.

- Advertisement -

இங்கிலாந்தில் பொதுவாகப் பந்து காற்றில் அதிகளவு ஸ்விங் ஆகும் என்பதால், இங்கிலாந்தில் ஸ்விங் செய்யும் எந்த அணியும் இங்கிலாந்திற்கு அதன் சொந்த மண்ணிலேயே சவால் அளிக்க முடியும். இதையுணர்ந்து பிரன்டன் மெக்கல்லம், பென் ஸ்டோக்ஸ் ஜோடி ஸ்விங்கிற்கான சூழலை எதுவும் செய்ய முடியாது என்கின்ற காரணத்தால், பந்துவீச்சிற்குப் பெரிதாய் ஒத்துழைக்காத ஆடுகளங்களை அமைத்து, அதில் அதிரடியாய் விளையாடி வெற்றி பெற்று வருகிறார்கள். பந்து ஸ்விங் ஆகும் பொழுது விக்கெட்டுகளை இழந்தாலும், பந்து ஸ்விங் ஆகாத பொழுது, அதிரடியாய் ரன்களை குவித்து, எதிரணியை நெருக்கடிக்குள் தள்ளுகினார்கள். இவர்களின் திட்டம் புரிந்து, எதிரணிகள் அங்குள்ள சூழலுக்குப் பழகுவதற்குள் இவர்கள் வெற்றியைத் தொட்டுவிடுகிறார்கள்.

சமீபத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்திற்கு வந்திருந்த நியூசிலாந்து அணியே, மூன்று போட்டிஙளிலும் முதலில் பேட் செய்ததால், இலக்கை நிர்ணயித்தது. முதல் ஆட்டத்தில் 275 ரன் இலக்கை ஜோ ரூட்டின் சதத்தோடு 78.5 ஓவர்களில் எட்டியது. இரணண்டாவது ஆட்டத்தில் 299 ரன் இலக்கை வெறும் 50 ஓவர்களில் எட்டி, ஜானி பேர்ஸ்டோ அதிரடியாய் 92 பந்துகளில் 136 ரன்கள் குவிக்க வென்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் ஜானி பேர்ஸ்டோ 157 பந்தில் 162 ரன் அடித்துக் காப்பாற்ற, இலக்காக வைக்கப்பட்ட 296 ரன்களை அதிரடியாய் 54.2 ஓவரில் எட்டி வென்றது. இந்த இன்னிங்ஸில் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாய் 44 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.

இதற்கெல்லாம் உச்சமாய், தற்போது இந்திய அணி விளையாடிய ஒரு போட்டியில் இந்திய நிர்ணயித்த 378 என்ற பெரிய இலக்கை 76.4 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றிருக்கிறது இங்கிலாந்து அணி. இந்த ஆட்டத்தில் இரு இன்னிங்ஸிலும் ஜானி பேர்ஸ்டோ சதமடித்து அசத்தி இருக்கிறார். ஜோ ரூட்டும் 142 ரன்கள் குவித்து தன் பங்கிற்கு அசத்தி இருக்கிறார். இவர்கள் இருவரும் அணியை ஆட்டமிழக்காமல் வெல்ல வைத்து 269 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள்.

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்த ஒரு கருத்து சில இரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், இந்திய இரசிகர்களிடையே கடுப்பையும் உருவாக்கி இருக்கிறது. அது என்னவென்றால்; “நாங்கள் சேஸிங்கில் எப்படிச் செயல்படுவோம் என்பதைப் பார்க்க, அவர்கள் இலக்காக எங்களுக்கு 450 ரன்கள் வைக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று கூறியிருக்கிறார். சில வெற்றிகளால் இப்படி எல்லாம் பேசுவது ரொம்ப அதிகம் என்றும், அப்படியென்றால் எதற்காக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவுட் அப்பீல் கேட்டீர்கள் என்றும், இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்!