ரகானே இடம் என் மனதில் இருப்பதை சொன்னேன் – தல தோனி மனம் திறந்த பேச்சு!

0
2445
Dhoni

இன்று ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்து முடிந்திருக்கிறது!

டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் மற்றும் சான்ட்னர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். இவர்களது பந்துவீச்சு மும்பை அணியை இந்த ஸ்கோரில் மடக்க உதவியது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய சென்னையணி ரகானாவின் அற்புதமான ஆட்டத்தால் வெகு எளிதாக 18.1 ஓவரில் வெற்றி பெற்று மூன்றாவது போட்டியில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ரகானே 27 பந்தில் ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் குவித்தார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி “இந்த வரவேற்பு நன்றாக இருக்கிறது. எங்கள் முதல் ஓவரிலேயே தீபக் சகரை இழந்தோம். சிசண்டா மகலாவுக்கு இது முதல் மேட்ச். இதனால் பந்துவீச்சாளர்களுக்கு சின்ன பிரச்சனைகள் இருந்தது. ஆனால் சுழற் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். முதல் ஆறு ஓவர்களில் ஆடுகளத்தில் பெரிதாக மாற்றமில்லை. அதற்குப் பிறகு பந்து இரு வேறு வேகத்தில் வந்தது. இதை எங்கள் சுழற் பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்த முடிந்தது” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய மகேந்திர சிங் தோனி ” இதற்குப் பிறகு மகலா நன்றாக திரும்பி வந்தார். பிரிட்டோரியஸ் மிக அருமையாக இருந்தார். எங்களது முதன்மை பந்துவீச்சாளரை நாங்கள் இழந்த போதும் இது நல்ல பந்துவீச்சு செயல்பாடு. துஷார் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. புதியவர்களுக்கு புதுவிதமான அழுத்தம் பிரச்சனை இருக்கும். அவர் இந்த முறை டொமஸ்டிக்கில் நல்ல சீசன் வைத்திருக்கிறார். மேலும் இறுதிக்கட்ட ஓவர்கள் வீசுவதைப் பற்றி நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் கடந்த இரண்டு போட்டிகளில் நிறைய நோ பால்களை வீசினார். தற்போது இது குறைந்து முன்னேற்றம் கண்டு இருக்கிறார். அவர் ரோகித்தை அவுட் ஆகிய பந்து மிக அழகானது!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ரகானே இடம் நாங்கள் ஆரம்பத்திலேயே பேசினோம். அவர் நீங்கள் என்னிடத்தில் என்ன தேடுகிறீர்கள் என்பது போலவே இருந்தார். நான் என் மனதில் இருந்ததை அவரிடம் தெரிவித்தேன். அவர் தொடர்ந்து சிக்ஸர்கள் அடிக்கக்கூடியவர் கிடையாது. ஆனால் அவர் தொழில்நுட்ப ரீதியாக திறமையான பேட்ஸ்மேன். அவர் பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைத்து ஆட்டங்களும் முக்கியமானவை. வெளியில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுவது முதன்மை நோக்கமாகும். உங்கள் முன்னாள் உள்ள சிக்கலை பார்ப்பது, வெற்றி பெறுவது புள்ளிகளை சேகரிப்பது முக்கியம்!” என்று கூறியிருக்கிறார்!