“கோலிகிட்ட நேரிலேயே இதை செய்ய வேண்டாம்னு நேத்து சொன்னேன்!”- ரிக்கி பாண்டிங் சுவாரசியமான தகவல்!

0
12640
Virat

நேற்று இந்திய அணிக்கும், தனிப்பட்ட முறையில் விராட் கோலிக்கும், பல நல்ல நினைவுகளை தரக்கூடிய போட்டியாக, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி கொல்கத்தாவில் அமைந்தது!

நேற்றைய போட்டியில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்கவைக்கும் என்கின்ற நிலைமை இருந்தது. முதலிடத்தில் இருக்கும்பொழுது இரண்டு அணிகளும் மேற்கொண்டு அரையிறுதியில் சந்திக்காது மற்றும் ஆஸ்திரேலியாவையும் அரையிறுதியில் சந்திக்காது என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக நேற்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் இரண்டு அணிகளுக்குமே அரையிறுதிக்கு முன்னேறியும் இருந்தது. இது மட்டும் இல்லாமல் இந்த உலகக் கோப்பையில் இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு இருப்பதால், போட்டிக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது.

இந்த நிலையில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் 326 ரன்கள் குவித்து அசத்தியது. குறிப்பாக விராட் கோலி 121 பந்துகளில் பொறுப்பாக விளையாடி 101 ரன்கள் எடுத்தார். இது அவருடைய 49 ஆவது சதமாக அமைந்தது. இதன் மூலம் சச்சினின் ஒருநாள் கிரிக்கெட் அதிகபட்ச சாதனையை சமன் செய்தார்.

நேற்று விராட் கோலிக்கு பிறந்த நாளும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக விராட் கோலி இடம் ஆஸ்திரேலியா லெஜன்ட் ரிக்கி பாண்டிங் தான் பேசிய விஷயங்களை இன்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “உண்மையில் நான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னது அவர் பந்துவீசி வார்ம்-அப் செய்து கொண்டிருந்த பொழுதுதான். அப்போது நான் அவரிடம் உங்களிடம் இருந்து பந்துவீச்சை எதிர்பார்க்கவில்லை நல்ல பேட்டிங்கை மட்டுமே எப்பொழுதும் நிறைய பார்க்க விரும்புகிறேன் என்று கூறினேன்.

பின்னர் போட்டி பற்றியும், உலகக் கோப்பை பற்றியும், அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றியும், கொஞ்சம் குடும்பத்தினர் பற்றியும் நாங்கள் பேசினோம். அதற்கு அடுத்து அவர் விளையாடச் சென்று ஒரு பெரிய சதத்தை அடித்தார்.

நேற்றைய போட்டியில் நல்ல நினைவுகளுடன் மைதானத்தை விட்டு வெளியே வந்த பல பேர் இருப்பார்கள். எல்லோரும் வீட்டிற்கு சென்று எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகளிடமும் பேரக்குழந்தைகளிடமும் இதைச் சொல்வார்கள். அவர்கள் மிகச் சிறப்பான ஒன்றைக் காண வந்திருந்தார்கள்!” என்று கூறியிருக்கிறார்!