என்னைவிட இந்த வீரர் ரொம்ப திறமை மிக்கவர் – சௌரவ் கங்குலி பிரமிப்பு!

0
110
Ganguly

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக ஐசிசி நடத்தும் தொடர்களில் வெல்ல முடியாமல் இருந்து வந்தது பிரச்சனையாக இருந்தது. ஆனால் இதை விட ஒரு பெரிய பிரச்சினையாக இந்திய அணிக்கு இருந்தது இந்திய அணியின் ரன் மெஷின் ஆன விராட் கோலி பேட்டிங் பார்ம் இல்லாமல் இருந்ததுதான்.

தனது கடைசியாக இருந்த 70 ஆவது சதத்தை 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவரிடம் இருந்து சதங்கள் வராவிட்டாலும் அரை சதங்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் அவையும் நின்று விட்டன.

- Advertisement -

இதற்கடுத்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் ஃபார்ம் படு மோசமான நிலைக்கு சென்றது. அவரது அறிமுக ஐபிஎல் தொடருக்கு பிறகு கடந்த ஆண்டு அவரது ரன் சராசரி 20க்கும் கீழ் சென்று மீண்டது. இது மட்டும் இல்லாமல் மூன்று முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இதற்கடுத்து விராட் கோலிக்கு அடுத்து சவுத்ஆப்பிரிக்கா அணியுடன் நடந்த டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இங்கிலாந்து தொடருக்கு மீண்டும் அழைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் விளையாடிய 4 இன்னிங்ஸ்களிலும் அவர் திரும்பி வர தவறினார்.

இதனால் இந்திய அணி நிர்வாகம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற நிலையில், விராட் கோலிக்கு ஒரு ஓய்வு தேவை என்ற கோரிக்கை வெளியில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இதுதான் ஒரே வழி என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதை தேர்ந்தெடுத்து அவருக்கு வெஸ்ட்இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஓய்வு அளித்தது.

- Advertisement -

இதற்கடுத்து ஆசிய கோப்பைக்கு திரும்ப வந்த விராட் கோலி, பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் கொஞ்சம் தடுமாறி 30 ரன்களுக்கு மேல் எடுத்தார். இதற்கடுத்து ஆங்காங் அணியுடன் அரைசதம் மற்றும் பாகிஸ்தான் அணியுடன் அரைசதம் அடித்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணியுடன் மொத்தமாக மீண்டு வந்தார் என்றே கூற வேண்டும். அந்தப் போட்டியில் வெறும் 61 பந்துகளில் 122 ரன்களை 12 பவுண்டரி 6 சிக்சர்கள் அடித்து நொறுக்கினார். மூன்று ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி விராட் கோலியை பாராட்டி சில கருத்துக்களை கூறியுள்ளார். அவர் பேசும் பொழுது ” ஒரு வீரராக திறமையின் அடிப்படையில் ஒப்பிடும் பொழுது, விராட் கோலி என்னைவிட திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறையில் வந்து விளையாடியவர்கள். நான் எனது தலைமுறையில் நிறைய கிரிக்கெட் விளையாடினேன். நான் விளையாடியதை விட அவர் தாண்டி இன்னும் அதிகமாக விளையாடலாம். தொடர்ந்து விளையாடுவார். அவர் அபாரமானவர் ” என்று கூறியிருக்கிறார்.

ஆசிய கோப்பை துவங்குவதற்கு முன் விராட் கோலி பற்றி பேசியிருந்த சௌரவ் கங்குலி ” அவர் பயிற்சி செய்யட்டும். போட்டிகளில் விளையாடட்டும். அவர் ஒரு பெரிய வீரர் நிறைய ரன்களை எடுத்துள்ளார். அவர் மீண்டும் தனது பழைய நிலைக்கு வருவார் என்று நான் நம்புகிறேன். அவரால் சதம் அடிக்க முடியவில்லை. அவர் தனது பழைய பார்மை கண்டு பிடிப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!