பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதி பெற முடியாமல் போனதை மிகப்பெரிய அவமானமாக நான் நினைக்கிறேன் – குமுறிய டெல்லி அணியின் மூத்த வீரர்

0
42

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை டெல்லி அணி கடைசி போட்டியில் இருந்தது. அதனுடைய கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டாலே ப்ளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெறலாம் என்ற நிலையில் இருந்தது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டெல்லி அணி தோல்வி பெற்று இறுதி நேரத்தில் தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணிக்கு பதிலாக பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாததை அவமானமாக நினைக்கிறேன்

டெல்லி அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் 8 போட்டிகளில் 250 க்கும் மேல் ரன் குவித்தார். மூன்றாவது இடத்தில் மிக சிறப்பாக அவர் டெல்லி அணிக்கு இறுதி நேரத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியில் விளையாடிய அவர், “இறுதி நேரத்தில் எங்களால் பிளே ஆப் செல்ல முடியாமல் போனது. உண்மையில் அதை நானும் ஒரு அவமானமான நினைக்கிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒரு தலைவராக ஒரு கேப்டனாக தனது அணியில் விளையாடும் வீரர்களை மிக சிறப்பாக கவனித்துக் கொண்டார். அவர்கள் அனைவரையும் நல்ல வகையில் அவர் ஊக்குவித்தார். உண்மையில் என்னையும் அவர் நல்ல வகையில் உணர வைத்தார். டெல்லி அணியில் நான் ஒரு முக்கியமான வீரர் என்பதை எனது மனதில் நான் அவர் மூலமாக உணர்ந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -

இந்தியாவில் நான் சபிக்கப்பட்டேன் என்று நினைத்தேன்

முதல் இரண்டு வாரங்கள் என்னால் எந்த ஒரு போட்டியிலும் விளையாட முடியாமல் போனது. கொரோனோ தொற்று காரணமாக நான் அதற்குரிய சிகிச்சை பெற்று வந்தேன். அந்த இடைவெளியில் நான் உண்மையில் சபிக்கப்பட்டதாக நினைத்தேன் என்று கூறினார்.

பிறகு அதிலிருந்து பூரண குணமடைந்து டெல்லி அணிக்கு 3வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடத் தொடங்கினேன். என்னால் இதேபோல தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும் என்கிற நம்பிக்கை என்னிடத்தில் உண்டு. சர்வதேச கிரிக்கெட் மிகவும் கடினமானது, ஆனால் நீங்கள் இங்குள்ளவர் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். கடந்த 12 மாதங்களில் எனது சிறந்ததை யாருடனும் ஒப்பிட முடியும் என்ற நம்பிக்கையை நான் உண்மையில் பெற்றுள்ளேன், என்று இறுதியாக கூறி முடித்தார்.