“முதல் ஐபிஎல் கப் ஜெயிக்க தான் லேட் ஆகுது. அதுக்கு அப்புறம்..” – டி வில்லியர்ஸ் பேட்டி!

0
404

ஆர்சிபி முதல் ஐபிஎல் கோப்பையை வென்று விட்டால், அதற்கு அடுத்தடுத்த கோப்பைகளை விரைவாக வெல்லும் அளவிற்கு பலம் படைத்த அணி என்று பெருமிதமாக பேசி இருக்கிறார் ஏபி டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இணையாக பலம் பொருந்தி அணியாக பார்க்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த 15 வருடங்களாக ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்ற அவ பெயரை தாங்கி வருகிறது.

- Advertisement -

இதுவரை ஏழு முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அனைத்திலும் இரண்டாவது இடத்தை பிடித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது

2022 ஆம் ஆண்டு ஐ பி எல்-இல் பிளே-ஆப் சுற்றுக்கு சென்று இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. இந்த வருடம் ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெறுவதற்கு முன்பாக 5 வீரர்களை வெளியேற்றி தங்களது பர்சில் 8.75 கோடி ஆர்சிபி அணி வைத்திருக்கிறது.

இந்நிலையில் இந்த வருடம் ஆர்சிபி அணி அணி கோப்பையை வென்று இந்த பெயரை இல்லாமல் ஆக்கும் என்று தனது சமீபத்திய பேட்டியில் முன்னாள் ஆர் சி பி வீரர் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

“இதுவரை எத்தனை சீசன்கள் ஆகிவிட்டது? 14 அல்லது 15 இருக்குமா! எத்தனை சீசன்கள் ஆனால் என்ன?. இந்த வருடம் இந்த அவப்பெயரை உடைப்பார்கள். தனது முதல் கோப்பையை வெல்வதற்கு தான் ஆர் சி பி போன்ற அணிக்கு நேரம் எடுக்கும். அதற்கு அடுத்ததாக இரண்டு, மூன்று, நான்கு என வரிசையாக வெல்லும் அளவிற்கு பலம் பொருந்திய அணியாக இருக்கின்றனர்.

டி20 போட்டிகள் பலமான அணி, பலகீனமான அணி என்று எதையும் பார்க்காது. அன்றைய போட்டியில் யாருக்கு எடுபடுகிறதோ, அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். குறிப்பாக நாக்-அவுட் போட்டிகளில் எந்த கணிப்பையும் நம்மால் கூற இயலாது.” என்றார்.

“எனக்கு ஆர்சிபி அணி என்றால், என்னுடைய தனி உலகம். கிரிக்கெட் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய அணி ஆர்சிபி. 2011 ஆம் ஆண்டில் இருந்து ஆர்சிபிக்காக நான் இருக்கிறேன். எனது வாழ்நாள் முழுவதற்கும் என்னுடன் பயணிக்கும் நண்பர்களை இந்த அணியிலிருந்து தான் பெற்றேன். என்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே அவர்களும் மாறிவிட்டார்கள். அப்படியாக ஒரு குடும்பமாகத்தான் ஆர்சிபி யில் நாங்கள் செயல்படுவோம். பல அணிகளுக்கு விளையாடி இருக்கிறேன். ஆனால் என்னால் ஆர் சி பி அணியை மட்டும் விட்டுக் கொடுக்க முடியாது.” என்றார்.