ஆஸ்திரலியா கிரவுண்ட் இவரோட பேட்டிங் ஸ்டைலுக்கு பக்காவா இருக்கும் – முன்னாள் வீரர் கணிப்பு!

0
11770

இவருடைய பேட்டிங் ஸ்டைலுக்கு ஆஸ்திரேலியா மைதானம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று இந்திய வீரரை புகழ்ந்திருக்கிறார் கெவின் பீட்டர்சன்.

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. மெல்போன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்காக இந்திய அணி ஏற்கனவே அங்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

உலகக் கோப்பை தொடருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்திய அணி ஆஸ்திரேலியவிற்கு சென்று பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வந்தது. மூன்று பயிற்சி ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் கே எல் ராகுல், சூர்யா குமார் யாதவ் விராட் கோலி ஆகியோர் நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கின்றனர். கீழ் வரிசையில் ஹர்திக் பாண்டியா நல்ல பினிஷிங் ரோல் விளையாடுகிறார். தினேஷ் கார்த்திக் முன்னும் பின்னும் மாறி மாறி இடம் கொடுக்கப்பட்டு விளையாட வைக்கப்படுகிறார். ஆனால் பிளேயிங் லெவனில் அவரும் நிச்சயம் இருப்பார் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மைதானம் கே எல் ராகுலுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும் அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு இந்த மைதானங்கள் நன்றாக உதவும் என்று தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் கெவின் பீட்டர்சன்.

- Advertisement -

“எனக்கு கே.எல். ராகுலை மிகவும் பிடிக்கும். அவரது பேட்டிங் ஸ்டைல் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். சமகால கிரிக்கெட்டில் அவர்தான் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று நான் நினைக்கிறேன்.

பவுன்ஸ், ஸ்விங் மற்றும் வேகம் ஆகியவற்றிற்கு ஆஸ்திரேலியா மைதானம் சிறப்பாக இருக்கும். இவை அனைத்தையும் கே.எல் ராகுல் மிகச் சிறப்பாக எதிர் கொண்டு வருகிறார். ஆகையால் அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு ஆஸ்திரேலியா மைதானம் சரியானதாக இருக்கும். இந்த உலக கோப்பையில் அவர்தான் அதிக ரன்களை அடிப்பார் என்று நினைக்கிறேன்.

அவ்வபோது கிரிக்கெட் வீரர்களுக்கு கடினமான சூழல் வருவது இயல்பு. அதே போல தான் கே எல் ராகுலும் காயம் காரணமாக அணியில் இடம் பெறாதபோது உணர்ந்து இருப்பார். அதனை கடந்து வந்து நன்றாக விளையாடுகிறார். இந்த உலக கோப்பையில் அவரை பல அணிகள் உற்று நோக்க வேண்டும்.” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார்.