அவர் சொன்னது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது ; அப்படித்தான் விளையாடுகிறேன் – சூரியகுமார் சுவராசிய புது தகவல்!

0
1219
Sky

தற்போது இந்திய டி20 அணியின் பேட்டிங் எந்த எதிரணிகளுக்கும் மிக ஆபத்தான ஒன்றாக மாறி இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி, மத்திம ஓவர்களில் குறைந்தது180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் சூரியகுமார் யாதவ்தான்!

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி உடன் சூரியகுமார் யாதவ் இணையும் பொழுது அவர் மேலும் மேலும் அபாயகர வீரராக எதிரணிக்கு மாறி விடுகிறார்.

- Advertisement -

ஏனென்றால், சூரியகுமார் யாதவ் அதிக பந்துகளை சந்திக்க விராட் கோலி மிகவும் அழகாக விளையாடி அவருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார். மேலும் சூரியகுமார் யாதவிடம் பவுண்டரிகள் வரவில்லை என்றால், அந்த அழுத்தம் அவர் மேல் விழாமல் விராட் கோலி பவுண்டரிகள் கொண்டு வருகிறார். மேலும் கடைசி நேரத்தில் விராட் கோலி பவுண்டரிகளுக்கு இயல்பாகப் போகிறார். இதனால் சூரியகுமார் மிகவும் வசதியாக தன் இயல்பில் அதிரடியாக விளையாட முடிகிறது.

கடந்த டி20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணி சீரமைக்கப்பட்டது. அதில் சூரியகுமார் யாதவுக்கு மிக முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தால் நியாயப்படுத்தி இருக்கிறார். இன்றைய தேதியில் ஆயிரம் ரன்கள் அடித்தவர்களில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர் இவர்தான்.

டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே முடிந்து 5 பீல்டர்கள் வெளிவட்டத்தில் நிற்பார்கள். இந்த மாதிரியான நேரத்தில் பவுண்டரிகள் அடிப்பது என்பது கொஞ்சம் கடினம். ஆனால் மத்திம ஓவர்களில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணியே அந்த போட்டியில் பெரும்பாலும் வெல்லும் என்பது தான் டி20 கிரிக்கெட் போட்டியின் நியதியாக இருக்கிறது. சூரியகுமார் மத்திம ஓவர்களில் அனாயசமாக பவுண்டரி சிக்ஸர்கள் விளாசுகிறார். இதனால் அணிக்கு மிக எளிதாக ரன்கள் வருகிறது.

- Advertisement -

இவரைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” சூர்யா மூன்று வடிவ கிரிக்கெட்டுக்குமான வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரைப் பற்றி நினைக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரால் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட முடியும். இவர் தாராளமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரை ஐந்தாம் இடத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு இவர் தனது திறமையை நிரூபிப்பார் ” என்று கூறியிருந்தார்…

இது பற்றி சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது ” அவர் என்னை அழைத்தது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நான் அறிமுகமாகும் போட்டியின் போது அவர் ஒரு குளத்தின் ஓரத்தில் அமர்ந்து என்னிடம் ” போய் அனுபவித்து விளையாடு ” என்றார். எனக்கு அது இன்னும் நினைவிருக்கிறது. நான் அதைத்தான் விரும்புகிறேன். அப்படித்தான் விளையாடுகிறேன் ” என்று கூறியுள்ளார்.