பெங்களூர் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்காக நான் முடிக்க வேண்டிய வேலைகள் இன்னும் மீதம் உள்ளது – ஏ.பி.டி வில்லயர்ஸ்

0
643
Ab de Villiers

இந்ந நூற்றாண்டு கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஏபி டிவில்லியர்ஸ். அதிரடியாக ஆடுவதிலும் சரி அணிக்கு தேவை என்றால் நிலைத்து நின்று ஆடுவதிலும் சரி என்று இரண்டுவிதமான கிரிக்கெட்டையும் சிறப்பாகக் கையாண்டவர் டிவில்லியர்ஸ். மேலும் பந்து வீச்சாளரை திணறடிக்கும் விதமாக கிரீஸின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆடக்கூடியவர் இவர். மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளர்களை கூட எளிதாக கையாண்டு சிக்சர் அடிப்பதில் வல்லவர் இவர். வேறு நாட்டுக்கு சென்று விளையாடினால் கூட வேற்று நாட்டு ரசிகர்கள் இவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இவரது ஆட்டம் இருக்கும். குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக சதம் கடந்த போது கூட இவரை இந்திய ரசிகர்கள் வெகுவாக பாராட்டியதுண்டு. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு நீண்டகாலம் விளையாடி அந்த அணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர்.

கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இவர். சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று இவர் எல்லா வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிறப்பாக விளையாடி வந்த போதும் இவரின் ஒரு முன்முடிவு பலருக்கு ஆச்சரியம் அளித்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய பயணம் முற்றிலுமாக முடிந்து விடவில்லை என்று தற்போது டிவிலியர்ஸ் கூறியுள்ளார். இன்னமும் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு தொடரும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மீண்டும் கிரிக்கெட் விளையாடா விட்டாலும், வேறு ஏதாவது முறையில் தென் ஆப்பிரிக்காவிற்கு மற்றும் பெங்களூரு அணிக்கு என இரண்டிற்கும் முடிந்த அளவு பங்களிக்க போவதாக கூறியுள்ளார். மேலும் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக ஒரு சில இளைஞர்களை தான் வழி நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் ஏதாவது ஒரு இளைஞரின் கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னுடைய தாக்கம் இருக்கும் என்றால் அது தான் தனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் என்றும் தெரிவித்துள்ளார். எப்படி ஓய்வு பெற்ற பிறகும் மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் நீடித்துக்கொண்டே இருக்கிறாரோ அதே போல இனி பெங்களூரு அணியில் ஏதாவது ஒரு வகையில் டிவிலியர்ஸ் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.