இந்த ஆஸ்திரேலிய வீரர் 2022 ஐபிஎலில் மோசமாக ஆடியது போது நான் அவருக்கு இந்த அறிவுரை மெசேஜை அனுப்பினேன் – வார்னர் வெளிப்படைப் பேச்சு

0
109

ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி நிர்ணயித்த இலக்கான 129 ரன்களை 14 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி எட்டியது குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 70* ரன்களுடனும் கேப்டன் ஆரோன் பின்ச் 61* ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நான் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் – டேவிட் வார்னர்

நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் ஆரோன் ஃபின்ச் 5 போட்டிகளில் விளையாடி 86 ரன்கள் மட்டுமே குவித்தார். மிகவும் மோசமான பார்மில் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. மோசமான பார்மில் இருந்த அவர் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மிக அற்புதமாக விளையாடினார்.

அவரது சக ஓப்பனிங் வீரர் டேவிட் வார்னர் தற்பொழுது தான் கேப்டன் ஆரோன் பின்ச்சுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அது தற்போது நல்ல வகையில் வேலை செய்துள்ளதாகவும் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“பந்து அதன் வேலையை முழுதாக பார்க்க வேண்டும். நீங்கள் சற்று அவசரப்பட்டு பந்து அதனுடைய வேலையை செய்வதற்கு முன்னர் நகர்ந்து விடுகிறீர்கள். பந்து உங்களுக்கு ஏற்றவாறு பயணிக்கும் போது அதை நீங்கள் அடிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை அது தாமதித்து ஸ்விங் ஆனால் அதை விட்டு விடுங்கள். அது அதன் போக்கில் கீழே போகப் போகிறது (ஸ்டம்ப் திசையில்). இவ்வாறு தான் அவருக்கு குறுஞ் செய்தி அனுப்பியதாக டேவிட் வார்னர் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் அளவுக்கு அதிகமாக நகர்ந்து விடுகிறார் அதுதான் பிரச்சினையாக இருந்தது. பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாகவே அவர் நகர்ந்து விடுகிறார் அல்லது வந்து வரும் திசையில் அவர் நேராக எதிர் கொள்கிறார். அந்த பிரச்சினையை அவரிடம் எடுத்துச் சொல்லி அவர் கூறிய அறிவுரையை நான் வழங்கினேன், அது தற்போது வேலை செய்துள்ளது.

நான் எப்பொழுதும் அவரிடம் டச்சில் இருப்பேன் அவரும் என்னிடம் எப்பொழுதும் டச்சில் இருப்பார்.மேலும், நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். இப்படி தேவையான விஷயங்களை நாங்கள் குறுஞ்செய்தி மூலம் பகிர்ந்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.