இந்திய அணிக்காக இன்னும் இத்தனை ஆண்டுகள் என்னால் விளையாட முடியும் – ஷிக்கர் தவான் நம்பிக்கை

0
251
Shikhar Dhawan

தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து சீராக ரன்கள் அடிக்கும் ஒரு வீரர் என்றால், அவர் ஷிகர் தவான்தான். ஆனால் அவர் கொண்டுவரும் ரன்கள் பெரிதாய் வெளியில் தெரிவதில்லை. 34 டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பைப் பெற்ற ஷிகர்தவானின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 40.61. இது தற்சமயத்தில் டெஸ்ட் துவக்க ஆட்டக்காரருக்கான மிகச்சிறந்த சராசரி ஆகும். 149 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள 6284 ரன்களை, 45.53 என்ற சிறப்பான சராசரியில் அடித்திருக்கிறார். 68 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 27.92 என்ற சராசரியில் 1759 ரன்களை குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளைப் போலவே, இருபது ஓவர் போட்டிகளுக்கும் ஒதுக்கப்பட்ட இவர், கடந்த இருபது ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இவர் ஆட்டத்தை அணுகும் முறை, ஆட்டத்தைக் கட்டமைக்கும் விதம் ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக்கொண்டேதான் வந்திருக்கிறது.

- Advertisement -

ஆரம்பத்தில் ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய இவர், பின்பு மும்பை அணிக்கு வந்து, அங்கிருந்து ஹைதராபாத் அணியில் இணைந்து சிலபல வருடங்கள் விளையாடினார். 2018 மெகா ஏலத்தில் மீண்டும் 5.20 கோடிக்கு இவரை வாங்கிய ஹைதராபாத், அடுத்த ஆண்டே டெல்லிக்கு டிரேடிங் செய்தது. கடந்த வருடம் வரை டெல்லிக்காக விளையாடிய இவரை இந்த முறை பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு வாங்கியிப்பதே, அவர் பேட்டிங் பார்ம் எந்தளவிற்கு முன்னேறி இருக்கறது என்பதற்கு உதாரணம்.

2011ஆம் ஆண்டு முதல் இப்போது வரை அவர் 300 ரன்களுக்கு கீழ் அடித்ததில்லை. 2016ஆம் ஆண்டு முதல் இப்போது வரை தொடர்ந்து ஏழு முறை 400 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். இதில் மூன்று முறை 500 ரன்களுக்கு மேலும், ஒரு முறை 600 ரன்களுக்கும் மேலும் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்திற்கு ஒரு இந்திய அணி செல்ல, ராகுல் டிராவிட்டின் தலைமையில் இலங்கையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர் விளையாட ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணிக்கு தவானே தலைமைத் தாங்கினார்.

தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் உள்நாட்டில் தென்ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறது இந்திய அணி. இந்தத் தொடரில் பல நட்சத்திர இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதால், ஷிகர் தவான் அந்த தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்துப் பேசியுள்ள 36 வயதான ஷிகர் தவான் அதில் “நான் சில ஆண்டுகளாக நல்ல முறையில் விளையாடி வருகிறேன். என்னால் இந்திய அணிக்காக அடுத்த மூன்று ஆண்டுகளோ இல்லை கொஞ்சம் மேலேவோ ஆட முடியும். கடந்த இருபது ஓவர் உலகக்கோப்பையின் போது நான் தேர்ந்தெடுக்கப் படவில்லை.

- Advertisement -

என்னை விட தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சரியாக இருப்பார்கள் என்று தேர்வாளர்கள் நினைத்திருக்கிறார்கள். இதை மதிக்க வேண்டும். நம்கையில் இருப்பது நன்றாய் விளையாடுவது மட்டும்தான், தேர்வு ஆவது இல்லை. எனவே நான் தொடர்ந்து சிறப்பாய் விளையாடுவதில் கவனம் செலுத்தினேன். இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்றால் அதற்குத் தகுதியாக எந்த நேரத்திலும் இருக்க வேண்டும்” என்று கூறினார்!