நான் பந்தை பார்க்க மட்டும்தான் செய்தேன் – இரட்டை சத நாயகன் இசான் கிசான் மாஸ் பேட்டி!

0
1700
Ishankishan

பங்களாதேஷ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை போன்று தொடரை இழந்திருந்த நிலையில் இன்று மூன்றாவது மட்டும் கடைசிப் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பிரமாண்டமாக பெற்றுள்ளது!

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் இசான் கிசான் 131 பந்துகளில் 210 ரன்கள் விளாசி அதிரடியான அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலி தனது 44ஆவது ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார். இதற்கு அடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சர்துல் தாக்கூர் அதிகபட்சமாக மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார். முடிவில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

- Advertisement -

இதைத்தொடர்ந்து ஆட்டநாயகன் விருதுபெறும் பொழுது இசான் கிசான் பேசுகையில் ” இந்த ஆடுகளமும் சூழ்நிலையும் பேட்டிங் செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருந்தது. நான் பந்தை சரியாகப் பார்த்து சரியாக அடிக்க மட்டுமே செய்தேன். இதில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் அதை மிகச் சிறப்பாகச் சரியாகப பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் அடிக்க வேண்டிய பந்துகளையும் அடிக்க வேண்டிய பந்துவீச்சாளர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு இருந்தேன். விஷயங்கள் எல்லாம் சரியாக என் வழியில் நடந்தது. மேலும் பயிற்சியாளர் மற்றும் அணி ஊழியர்கள் என்னுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள் நிறைய பேசுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்!

தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெகதி ஹசன் கூறும்பொழுது ” ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இது எனக்கு முதல் தொடர் நாயகன் விருது ஆகும். இந்திய அணியை வீழ்த்தியது எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம். எங்கள் முன்னால் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடர் இருக்கிறது. அதில் நாங்கள் நன்றாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னிடம் நிறைய சீனியர் வீரர்கள் பேசுகிறார்கள். நான் எப்பொழுதும் நேர்மறையாகவே இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்!

தொடரை வென்ற பங்களாதேஷ் கேப்டன் லிட்டன் தாஸ் பேசும்பொழுது “இஷான் மற்றும் விராட் மிக நன்றாக பேட்டிங் செய்தனர். இஷானுக்கு எனது வாழ்த்துக்கள். நாங்கள் எங்களால் முடிந்த வரை முயற்சி செய்தோம் ஆனால் நல்ல விதத்தில் தீர்வு காண முடியவில்லை. 330 முதல் 340 ரன்கள் இலக்காக இருந்திருந்தால் இது வேறு விதமான ஆட்டமாக இருந்திருக்கும். இந்திய அணி ஒரு நல்ல அணி. நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்” என்று தெரிவித்தார்!

- Advertisement -