தோனி, கிறிஸ் கெயில் போல எனக்கு உடலமைப்பு இல்லையெனிலும் எனக்குள் அந்த விஷயம் இருக்கிறது – விருத்திமான் சஹா உறுதி

0
142
Wriddhiman Saha and MS Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டியில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது. அந்த அணியின் விக்கெட் கீப்பிங் வீரர் விருத்திமான் சஹாவுக்கு ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்பொழுது தொடர்ச்சியாக அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது அதிரடியான துவக்கத்தால் குஜராத் அணி 199 ரன்கள் குவித்து ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சஹா 154 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 30.8 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 128.33 ஆக உள்ளது.

- Advertisement -
என்னுடைய கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்து விடாது

ஐபிஎல் தொடர் என்று வந்துவிட்டாலே இளம் வீரர்கள் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள் என்று இல்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லர் (31 வயது) கே எல் ராகுல் (30 வயது) மற்றும் ஷிகர் தவன்(35) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.ஐபிஎல் தொடரில் வயதுவரம்பு எக்காலத்திலும் ஒரு அட்வான்டேஜ் ஆக அமையாது. வயது வரம்பைத் தாண்டி சிறப்பாக விளையாட அனுபவம் மட்டுமே இங்கு தேவை.

தற்பொழுது அதை சுட்டிக்காட்டி பேசியுள்ள குஜராத் அணியின் ஓபனிங் விக்கெட் கீப்பிங் வீரரான விருத்திமான் சஹா “அனைவரும் என்னால் ஷார்ட் பார்மெட்டில் சிறப்பாக விளையாட முடியாது என்று நினைக்கிறார்கள். அது தவறு, என்னால் அனைத்துப் பார்மெட்டிலும் சிறப்பாக விளையாட முடியும். என்னுடைய கிரிக்கெட் கேரியர் முடிந்துவிட்டது என்று கற்பனை கூட செய்து பார்க்க வேண்டாம்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

எனக்கு அவர்களைப் போன்ற உடலமைப்பு கிடையாது

நடப்பு ஐபிஎல் தொடரில் எனது அணியில் (குஜராத் அணியில்) ஓபனிங் வீரராக களமிறங்கி சிறந்த துவக்கத்தை கொடுத்து வருகிறேன். முடிந்தவரை பவர் பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அணியின் ஸ்கோரை உயர்த்துவதே என்னுடைய நோக்கம். அதை நான் சரியாக செய்து வருகிறேன் என்று நம்புகிறேன்.

- Advertisement -

எனக்கு மகேந்திர சிங் தோனி, ரசல் மற்றும் கிறிஸ் கெய்ல் போன்றவர்களின் உடல் அமைப்பு கிடையாது. இருப்பினும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற வேகம் மற்றும் தீவிரம் எப்பொழுதும் எனக்குள் அதிகமாக இருக்கும். இவ்வாறு விருத்திமான் சஹா நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

இன்று குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.