பங்களாதேஷ் கூட ரன் அடிக்க இந்த பிளான்தான் போட்டேன் – அஷ்வினின் அட்டகாச பிளான்!

0
854
Ashwin

பங்களாதேஷ் நாட்டிற்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் செய்திருந்தது!

இந்தச் சுற்றுப் பயணத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை அதிர்ச்சிக்கரமாக இழந்தது. விரலில் காயம் அடைந்து அத்தோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளியேற டெஸ்ட் தொடருக்கு கே.எல்.ராகுல் பொறுப்பேற்றார்!

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற மிக முக்கியமான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி இந்தத் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது!

இந்தத் தொடரை கைப்பற்றுவதற்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிகிங்லும் மிகப்பெரிய பங்களிப்பை செய்தார்.

குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்கிஸில் 64 பந்துகளில் 42 ரன்களை நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் எடுத்து, ஸ்ரேயாஷ் ஐயருடன் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணி வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார்!

- Advertisement -

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடூயூப் சேனலில் சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக பேட்டிங் செய்ய அற்புதமான திட்டம் ஒன்றை தனித்து தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

இது குறித்து அவர் கூறும் பொழுது
” அந்த ஆடுகளத்தில் 35 ஓவருகளுக்கு பிறகு பயன்படுத்தப்படும் பந்து பஞ்சு போல் ஆகிவிடுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒன்றாக இருந்தது. இதை நான் மனதில் வைத்திருந்தேன். இதற்கு அடுத்து அந்த ஆடுகளத்தில் பந்து பெரிய அளவில் சுழற் பந்து வீச்சில் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் பந்து பெரிய அளவில் எகிறாதது பிரச்சனையாக இருந்தது” என்று கூறினார்…

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இப்படி பந்து குறைவாக பவுன்ஸ் ஆவதால் நம்முடைய பேட்ஸ்மேன்களுக்கு பந்தை குனிந்து தடுத்து ஆட நேரம் கிடைப்பதில்லை. எனவே நான் குனிந்து நின்று விளையாடப் போவதாக முடிவு செய்து விக்ரம் ரத்தோரிடம் சொல்லிவிட்டு போய் விளையாடினேன். அவர்கள் பந்தை உருட்ட நான் தடுக்க எளிமையாக இருந்தது. இந்தத் திட்டம்தான் எனக்கு ரன் அடிக்கவும் இந்திய அணி வெல்லவும் உதவியாக இருந்தது” என்று கூறியுள்ளார்!