7,8 கிலோ குறைத்து, கடினமாக உழைக்கிறேன் என்னை ஏன் அந்த சீரியஸ்ல எடுக்கவில்லை – பிரித்திவி ஷா உருக்கமான பேட்டி!

0
947

இந்திய அணியில் இடம் பெறுவதற்கு கடினமாக உழைத்து வருகிறேன். ஆனாலும் இடம் கொடுக்கப்படவில்லை என வருத்தமாக பேட்டி அளித்திருக்கிறார் ப்ரித்வி ஷா.

இந்திய அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடிவிட்டு சென்று இருக்கின்றனர்.

- Advertisement -

அதற்கு அடுத்ததாக வரவிருக்கும் ஒருநாள் தொடரை ஷிகர் தவன் தலைமையிலான இரண்டாம் கட்ட இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், இசான் கிசான், ராகுல் திரிப்பாதி உள்ளிட்ட பலரும் விளையாடி வருகின்றனர்.

துரதிஷ்டவசமாக இளம் துவக்க வீரர் பிரித்வி ஷாவிற்கு இடம் கொடுக்கப்படவில்லை. அவர் இந்திய ஏ அணியில் விளையாடி வந்தார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்று நன்றாக விளையாடினார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருகிறார். ஆனால் அவருக்கு ஏன் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை? என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்து வந்தது.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவரிடமே கேள்வி எழுப்பினர் அதற்கு மிகவும் வருத்தத்துடன் பதில் அளித்திருக்கிறார் ப்ரித்வி ஷா. அவர் கூறுகையில்,

- Advertisement -

“நான் முன்பை விட கடினமாக உழைக்கிறேன். ஏழு முதல் எட்டு கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறேன். இனிப்புகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டேன். முன்பை விட வேகமாகவும் ஓடுகிறேன். தொடர்ச்சியாக ரன்களையும் அடித்து வருகிறேன். ஆனால் ஏன் தென்னாப்பிரிக்க ஒரு நாள் தொடரில் என்னை எடுக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் தேர்வு குழுவினர் இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதை செய்வதற்காக முழு முனைப்புடன் இருக்கிறேன். இதனை பின்னடைவாக கருதாமல் இன்னும் உழைக்க வேண்டும் என மனதில் உறுதியுடன் செயல்படுவேன்.” என வருத்தம் கலந்த நம்பிக்கையோடு பேசினார்.