“இந்திய வீரர் ஆப்கானிஸ்தான் கூட இருக்கப்பயே தெரியும்.. இப்படித்தான் நடக்கும்னு..!” – சோயப் மாலிக் வருத்தமான பாராட்டு பேச்சு!

0
11809
Malik

ஆசியக் கண்டத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சி மிகவும் அபரிமிதமாக இருக்கிறது. பல்வேறு சிக்கல்களை உள்நாட்டில் கொண்டு இருந்தாலும் கூட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் செழிப்பாக வளர்ந்து வருகிறது.

2015 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்குள் வந்து ஸ்காட்லாந்து அணியை வென்று இருந்த ஆப்கானிஸ்தான் அணி அதற்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் வெற்றிகள் எதையும் பெறவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் யாரும் எதிரே பார்க்காத விதத்தில், பேட்டிங் செய்ய சாதகமான மற்றும் சிறிய மைதானமான டெல்லியில் வைத்து பிளேயிங் லெவனில் எல்லோரும் பேட்டிங் செய்யக்கூடிய திறமை படைத்த நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக முக்கியத்துவம் பெற்ற ஒரு வெற்றி. எதிர்காலத்தில் நிச்சயம் சில வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்காக இந்த வெற்றியின் மூலம் உந்தப்பட்டு வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மேலும் ஆச்சரியத்தை கூட்டி இருக்கிறது. அரசியல் ரீதியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே சில பிரச்சனைகள் உண்டு. எனவே இந்த வெற்றி ஆப்கானிஸ்தானில் மிகவும் உணர்வுபூர்வமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை வென்றதை விட பாகிஸ்தானை வென்றது ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் இருந்து வருகிறார். மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவை மென்டராக ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் நியமித்துக் கொண்டது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் “அஜய் ஜடேஜா ஆப்கானிஸ்தான் டக் அவுட்டில் அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது இந்தியாவில் உள்ள சேனல் ஒன்றில் அஜய் ஜடேஜா உடன் இணைந்து பணிபுரிந்து இருக்கிறேன்.

அவர் மிகச் சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்டவர். உங்களைச் சுற்றி சரியான மனிதர்கள் இருக்க வேண்டும். இல்லை உங்கள் அணியைச் சுற்றி சரியான மனிதர்கள் இருப்பது முக்கியம்!” என்று கூறியிருக்கிறார்!