என்னோட அனுபவத்தில் சொல்றேன்.. ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும் – கங்குலி கருத்து!

0
918

நான் அளிக்கும் பேட்டியை ஹர்திக் பாண்டியா பார்க்கிறார் என நினைக்கிறேன். அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி வெற்றிபெற்று, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக நிலவி வரும் ஐசிசி கோப்பைகள் வறட்சியை போக்குவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தபோது ஏமாற்றம் அளிக்கும் விதமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் பைனலில் தோல்வியை தழுவி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறி உள்ளது.

- Advertisement -

இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததால், ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றனர் மற்றொரு பக்கம் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவருக்கு இடம் கொடுக்கத் தேவையில்லை வயதாகிவிட்டது என பல்வேறு விதமாக பேசி வருகின்றனர். அத்துடன் 36 வயதாகும் புஜாரா இனி எதற்கு அணியில்? இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர செய்யுங்கள் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

இந்நிலையில் முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி, ரசிகர்களின் இந்த கருத்திற்கு தனது சமீபத்திய பேட்டிகள் பதில் கொடுத்திருக்கிறார். “ஒரு தோல்வி எந்த வீரரின் திறமையையும் முடிவு செய்திடாது. இந்திய அணி பைனல் வரை வந்திருக்கிறது நாம் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். புஜாரா, ரோகித் சர்மா ஆகியோரை அணியிலிருந்து எடுப்பது எந்த வகையிலும் சரியாகாது. அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம். அத்துடன் விராட் கோலிக்கு 34 வயது தான் ஆகிறது. அவரும் தொடர்ந்து விளையாட வேண்டும்.” என்றார்.

“இந்திய அணியில் ரிசர்வ் வரிசையில் பலம் மிக்க வீரர்கள் இருக்கின்றனர். ஜெய்ஸ்வால், பட்டிடார் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் மிகச்சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றனர். நான் வெறுமனே ஐபிஎல் ஆட்டங்களை வைத்து பேசவில்லை. உள்ளூர் போட்டிகளில் அவர்கள் விளையாடிய விதத்தை வைத்து கூறுகிறேன். ரிசர்வ் வரிசையில் இத்தகைய வீரர்கள் இருக்கும்பொழுது நாம் எதைப் பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. இந்திய அணி எதிர்காலமும் பலம் மிக்கதாகவே இருக்கிறது.

- Advertisement -

என்னுடைய இந்த பேட்டியை ஹர்திக் பாண்டியா பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவரும் வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து முடிவெடுப்பார் என யோசிக்கிறேன். அதற்கான உழைப்பை கொடுக்க வேண்டும். அணிக்குள் வர முயற்சிக்க வேண்டும்.” என்றார்.