இந்த ஒரு காரணத்திற்காகவே 9 வருடங்களாக வீட்டிற்குச் செல்லவில்லை – மும்பை இந்தியன்ஸ் இளம் வீரர் கார்திக்கேயா வைராக்கியம்

0
902
Kumar Karthikeya

மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நேற்று முதல் வெற்றி கிடைத்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

தன் அபாரமான பந்து வீச்சில் மூலமாக ஆச்சரியப்படுத்திய குமார் கார்த்திகேயா

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் முறையாக குமார் கார்த்திகேயா களமிறங்கினார். 24 வயதான இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். வலது கையில் பேட்டிங் விளையாடுவது, இடதுகையில் ஸ்பின் பந்து வீசுவது என அபாரமான திறமையை பெற்றிருக்கிறார்

நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய 19 ரன்கள் மட்டுமே கொடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டை கைப்பற்றினார். நேற்றைய போட்டியில் இவர் வீசிய பந்துகளை அவ்வளவு எளிதில் ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களால், அதிலும் குறிப்பாக ஜோஸ் பட்லரால் கூட கணிக்க முடியவில்லை. அனைவரும் இவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு செல்ல போகிறேன்

கடந்த 9 வருடங்களில் நான் ஒரு முறை கூட எனது வீட்டிற்கு சென்றது கிடையாது. கடைசியாக வீட்டிலிருந்து கிளம்பிய பொழுது, மனதில் ஒரு உறுதிமொழியை நான் எடுத்துக் கொண்டேன். இனி வாழ்க்கையில் ஏதாவது பெரிதாக சாதித்த பின்னரே, வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதே அந்த உறுதிமொழி.

இடையில் எனது பெற்றோர்கள் பலமுறை வீட்டிற்கு அழைத்தனர். இருந்தபொழுதும் எனது உறுதிமொழியை நான் மீற விரும்பவில்லை. ஆனால் தற்பொழுது நடப்பு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் நான் சந்தோசமாக எனது வீட்டிற்கு திரும்புவேன் என்று குமார் கார்த்திகேயா தற்போது கூறியுள்ளார்.