ரோகித் சர்மாவை முடிக்க இந்தத் திட்டத்தை பாபருக்கு சொல்லி இருக்கிறேன் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா பரபரப்பு பேச்சு!

0
490
Rohitsharma

எட்டாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அமர்க்களமாக இன்று தகுதி சுற்றுப் போட்டிகள் மூலமாக ஆரம்பித்து இருக்கிறது. முதல் போட்டியிலேயே கத்துக்குட்டி நமீபியா அணி இலங்கை அணியை வீழ்த்தி பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது!

இந்த டி20 உலகக்கோப்பையில் 8 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடுகின்றன. ஏ பிரிவில் இலங்கை நமீபியா நெதர்லாந்து யுஏஇ ஆகிய நான்கு அணிகளும், பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் ஜிம்பாப்வே ஸ்காட்லாந்து அயர்லாந்து ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

இந்தக் குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளோடு சேர்ந்து12 அணிகளை கொண்டு நடத்தப்படும் பிரதான சுற்றில் விளையாடும். தகுதி சுற்றுப் போட்டிகள் இன்று துவங்கி இருபத்தி ஒன்றாம் தேதி வரை நடக்கிறது. பிரதான சுற்று போட்டி 22ஆம் தேதி துவங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியை மெல்போர்ன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. கடந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் ஏற்பட்ட படுதோல்வி இந்திய கிரிக்கெட்டில் எவ்வளவு அதிர்வலைகளை உருவாக்கியது என்று அனைவருக்கும் தெரியும். இந்த காரணத்தால் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்த இரு அணிகளும் மோதும் போட்டிக்கு வழக்கத்தை விட கூடுதலான எதிர்பார்ப்புகள் உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, டி20 உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா கிளம்புமுன், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபருக்கு, ரோகித் சர்மாவை எப்படி வீழ்த்துவது என்று திட்டம் தீட்டி தான் தந்துள்ளதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி அவர் கூறும் பொழுது
“உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி புறப்படுவதற்கு முன் பாபர் ஆசம் தலைமை தேர்வாளர் உடன் இருந்தார். அவரிடம் நான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உங்கள் திட்டம் என்ன என்று விசாரித்தேன். நான் அவரிடம் ரோகித் சர்மாவை சீக்கிரத்தில் வீழ்த்த வழிமுறையை உங்களுக்கு நான் இப்பொழுது கூறமுடியும் என்று கூறினேன். அதைக் கேட்ட பாபர் ஆச்சரியம் அடைந்தார். நான் பாபரிடம் ஷாகின் அப்ரிடியை மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசச் சொல்லி ஷார்ட் லெக்கில் ஒரு பீல்டரை வைத்தும், அடுத்து அதேபோல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் இன் ஸ்விங் யார்க்கர் வீசச் சொல்லி, ஒரு சிங்கிள் ரன் கூட தராமல், ரோகித் சர்மாவை எளிதாக ஆட்டமிழக்க வைக்க முடியும் என்று கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்!