இதெல்லாம் இருந்ததால தான் அவர் பெயரை கேப்டனுக்கு சிபாரிசு செஞ்சேன் – மாஸ்டர் பிளாஸ்டர் சுவாரஸ்ய பேட்டி!

0
365
ms dhoni sachin tendulkar

உலக கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட் மேனுக்குப் பிறகு உலக கிரிக்கெட் வல்லுனர்களாலும் கிரிக்கெட் ரசிகர்களாலும் அதிகமாக கொண்டாடப்பட்டு கொண்டிருப்பவர் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் தனது 19ஆவது வயதில் ஆஸ்திரேலியாவின் அதிவேக ஆடுகளமான பெர்த் ஆடுகளத்தில் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் . அந்த ஆட்டத்தை பார்த்த பிராட்மேன் இந்த இளைஞர் ஆடுவது என்னைப் போலவே இருக்கிறது என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் என சர்வதேசத்தில் நூறு சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரின் வசமே உள்ளன . மேலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரரும் இவர்தான் இப்படி பல சாதனைகளுக்கும் காரணமான சச்சின் டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் மட்டும் ஏனோ சோபிக்க தவறிவிட்டார் . அவரது தலைமையின் கீழான இந்திய அணி பல மோசமான தோல்விகளை கண்டுள்ளது மறுக்க முடியாது

- Advertisement -

இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய டெண்டுல்கர் தலைமை பண்பு பற்றி உரையாற்றினார் .அப்போது பேசிய டெண்டுல்கர் “தலைமைப் பண்பு என்பது வெறும் விளையாட்டுத் திறமையால் மற்றும் வந்து விடுவதல்ல அதற்கு ஒரு மனிதனின் குணமும் அவரது பக்குவமும் மிகவும் அவசியம்” என்று கூறினார்

அப்போது பேசிய அவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக வலம் வந்த எம்எஸ்.தோனி எவ்வாறு கேப்டன் பொறுப்பேற்றார் என்பது பற்றி கூறினார் . இதுகுறித்து பேசிய சச்சின் ” நாங்கள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிக் கொண்டிருந்தபோது இந்திய அணி நிர்வாகம் என்னை மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க கேட்டுக் கொண்டது . அப்போது அணியில் ஒரு தலைவர் இருந்தார் அவர் எங்களுக்கெல்லாம் ஜூனியர் தான். அவரை நீங்கள் நன்றாக கூர்ந்து கவனிக்க வேண்டும் எதிர்காலத்தில் நிச்சயம் அவர் ஒரு நல்ல தலைவராக வருவார் . மேலும் ஸ்லீப்பில் பில்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆட்டத்தின் போக்கு பற்றி அவரிடம் நிறைய முறை விவாதித்துள்ளேன் அப்போது அவர் அளித்த பதில்கள் என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கின்றன . அவரின் பதிலில் எப்போதும் ஒரு அமைதித்தன்மையும் சரி சமமாகவும் இருக்கும் . மேலும் அவர் எதிர்கால அணியை சிறந்த முறையில் வழிநடத்த செய்வார்”என்று தான் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார் .

ஒரு அணிக்கு நல்ல கேப்டன் என்பவர் தம் எதிராளிகள் சிந்திப்பதை விட ஒரு அடி முன்பாகவே சிந்தித்திருக்க வேண்டும் . அந்தத் தன்மைகளை நான் தோனியிடம் கண்டேன் . மேலும் கிரிக்கெட்டில் எப்போதும் கூறுவார்கள் சமயோஜிதமாக ஆட வேண்டும் என்று . அதேபோல பொறுமையும் அவசியம் 10 விக்கெட்டுகளை நாம் 10 பந்துகளில் உடனடியாக வீழ்த்தி விட முடியாது . அதற்கான திட்டமிடலுடன் பொறுமையும் அவசியம் ஆட்டத்தின் முடிவில் வெற்றி தோல்விதான் முக்கியமாக பார்க்கப்படும் . இது போன்ற குணங்களையும் அணியை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்லும் தன்மைகளையும் அவரிடம் கண்டதால் அவர் இந்திய அணியின் கேப்டனாக இருக்க சிபாரிசு செய்தேன் என்று கூறினார் சச்சின் டெண்டுல்கர்

- Advertisement -

சச்சின் டெண்டுல்கரின் கணிப்பு எப்போதுமே தப்பாகாது என்பதை நிரூபிப்பதை போல் இந்திய அணிக்காக ஒரு டி20 உலக கோப்பை ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு என் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வாங்கி தந்த வெற்றி கேப்டன் ஆக திகழ்ந்தார்.எம் எஸ் தோனி