தோனி விட்டுச்சென்ற இடத்தை நான் நிரப்பிக்காட்டுவேன் – இஷான் கிஷன் சவால்!

0
493

நான் சிறுவயதில் இருந்தே தோனியை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் விட்டுச் சென்ற இடத்தை நான் நிரப்புவேன் என இஷான் கிஷன் உறுதியாக கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்கு மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்து வந்துள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்றிருக்கிறது.

- Advertisement -

2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என எதையும் இவர் விட்டு வைக்கவில்லை. அதேபோல் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்ற ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடுகிறார். இவரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு பல வீரர்கள் இன்றும் இந்திய அணியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய ரோல் மாடல் தோனி என்றும், அவரைப் பார்த்து தான் சிறுவயதிலிருந்தே நான் வளர்ந்திருக்கிறேன் என்றும் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் இஷான் கிஷன்.

- Advertisement -

பிசிசிஐ டிவிக்கு இஷான் கிஷன் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நானும் தோனியும் ஒரே ஊரில் இருந்து தான் வந்திருக்கிறோம். உள்ளூர் போட்டிகளில் ஜார்க்கண்ட் அணிக்காக அவரும் விளையாடி இருக்கிறார். நானும் விளையாடி வருகிறேன். என்னுடைய ரோல் மாடல் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது தோனி மட்டுமே. இந்திய அணியில் அவர் எண்ணற்ற பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

அவர் விட்டுச் சென்ற இடத்தை நான் நிரப்புவதற்கு முயற்சிக்கிறேன். இந்திய அணியில் இருக்கிறேன். வரும் காலங்களில் இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்று தருவேன்.” என்றார்.