இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவை புரட்டி எடுப்பார்கள்; பைனலில் இங்கிலாந்து-பாகிஸ்தான் தான் மோதும் – வாய்விட்ட சோயிப் அக்தர்!

0
6945
Shoaib Akhtar

அரை இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி பைனலுக்கு முன்னேறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சோயிப் அக்தர்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடர் பல ஆச்சரியங்களையும் விறுவிறுப்புகளையும் தந்திருக்கிறது. தற்போது அரையிறுதி சுற்று நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நிறைய இறுதிப் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய அணி 2011 ஆம் ஆண்டு போல இம்முறையும் கோப்பையை வென்று இந்தியாவிற்கு எடுத்து வரும் என பல்வேறு விளம்பரங்களும் நம்பிக்கைகளும் நிலவி வருகின்றன. அதேபோல் பாகிஸ்தான் அணி 1992 ஆம் ஆண்டு போல உலகக் கோப்பையை வென்று மீண்டும் பாகிஸ்தானுக்கு பெருமை சேர்க்கும் என்றும் அந்நாட்டு ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செமி பைனலில் இந்தியாவை வீழ்த்தி விட்டு பைனலுக்கு இங்கிலாந்து அணி தான் வரவேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார் சோயிப் அக்தர். அவர் கூறுகையில், “இந்தியா பாகிஸ்தான் போட்டி எனக்கு மீண்டும் வேண்டாம். 1992 ஆம் ஆண்டு போல இந்த வருடமும் மீண்டும் நடக்க வேண்டும் என்றால் அதற்கு இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வர வேண்டும்.

- Advertisement -

1992ம் ஆண்டு நியூசிலாந்து அணியை வீழ்த்தி விட்டு நாங்கள் இறுதிப் போட்டிக்கு சென்றோம். அதேபோல இம்முறையும் நடந்திருக்கிறது. ஆகையால் மீண்டும் ஒருமுறை இந்த வரலாறு நடக்க வேண்டும் என்றால் இறுதி போட்டியில் இந்தியாவை விட இங்கிலாந்து தான் எங்களுக்கு வரவேண்டும்.” என்று பேட்டி அளித்துள்ளார்.