” பாகிஸ்தான் வீரர் மொஹம்மத் ஆமிர் வெறும் ஒரு சாதாரண பவுலர் தான் ” – ரோஹித் ஷர்மாவின் வார்த்தைகளுக்கு பதிலளித்த ஆமிர்

0
74
Mohammad Amir and Rohit Sharma

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிபோட்டியில் பாகிஸ்தான் இந்தியா மோதியது. பும்ராவின் நோ-பாலில் தப்பிய பகார் ஜமானின் சதத்தோடு 338 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.

ஆனால் அடுத்துக் களமிறங்கிய இந்திய அணி 158 ரன்களில் சுருண்டு, 180 ரன் என்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையைப் பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவானை முகமது ஆமீர் தன் சிறப்பான ஸ்விங் வேகப்பந்து வீச்சால் பெவிலியன் அனுப்பினார். இதில் ரோகித் சர்மாவை முதல் ஓவரிலேயே பெவிலியன் அனுப்பினார்.

- Advertisement -

இதுகுறித்தும் முகமது ஆமீர் குறித்தும் ரோகித் சர்மாவிடம் ஒருமுறை கேட்ட பொழுது, அவர் முகமது ஆமீரை சாதாரதா சராசரியான பவுலர் என்று குறிப்பிட்டிருந்தார். ரோகித் சர்மாவின் இந்தக் கருத்துப் பற்றி அப்போது கிரிக்கெட் வட்டாரத்திலும், சமூக வலைத்தளத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தற்போது ரோகித் சர்மா கூறிய தன் பந்துவீச்சு குறித்தான கருத்துப் பற்றி முகமது ஆமீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நீண்ட விளக்கமொன்றைப் பதிலாகத் தந்திருக்கிறார். அதில் “நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. எல்லோரும் என்னைச் சிறந்த பந்துவீச்சாளராகக் கருதவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து முகமது ஆமீர் “இது ஒன்றும் மோசமானதில்லை. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக இதையெல்லாம் எதிர்மறையாக எடுத்துக்கொள்ள கூடாது. நாம் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்க முடியாது” என்றிருக்கிறார்.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மாவிற்குப் பந்துவீசியது குறித்துப் பேசிய முகமது ஆமீர் “அவர் ஒரு உலகத்தரமான பேட்ஸ்மேன். நான் அவருக்கு எதிராக ஒவ்வொரு முறையும் சிறப்பாகவே பந்துவீசினேன். அவர் என்னை எதிர்கொள்ளும் போதெல்லாம் போராடினார். ஆனால் நான் இப்பொழுதும் அவரை உலகத்தரமான பேட்ஸ்மேன் என்றுதான் கூறுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டிக்கு அடுத்து முகமது ஆமீரை சாதாரண பந்துவீச்சாளர் என்று கூறியிருந்தாலும், 2016ஆம் ஆண்டு முகமது ஆமீர் திரும்பி வந்த பொழுது, அவரைச் சுற்றியே செய்திகள் சுழன்ற பொழுது, அவர் மீதான இந்தப் பரபரப்பு நியாயமற்றது என்றும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!