ரிஷப் பண்ட் விட்டுட்டு புஜராவுக்கு எப்படி துணை கேப்டன் கொடுத்தாங்கன்னு தெர்ல.. – கேஎல் ராகுல் திடுக் பேட்டி!

0
496

புஜாராவிற்கு எதன் அடிப்படையில் துணை கேப்டன் பொறுப்பு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என திடுக்கிடும் தகவலை பகிர்ந்து இருக்கிறார் கே எல் ராகுல்.

வங்கதேசம் அணியுடன் ஒருநாள் தொடர் முடிவுற்ற பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

நடந்து முடிந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியின் போது ரோஹித் சர்மாவின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. காயத்தின் தீவிரம் சற்று அதிகமாக இருந்ததால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டார்.

முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்தது. அணியின் துணை கேப்டனாக இருந்து வரும் கேஎல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பேற்று விளையாட உள்ளார்.

துணை கேப்டனாக அனுபவமிக்க வீரர் சித்தேஷ்வர் புஜாரா நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த தொடரில் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கே எல் ராகுல், புஜாராவிற்கு எதன் அடிப்படையில் துணைக் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை என கூறியிருக்கிறார். கே எல் ராகுல் பேசியதாவது:

எந்த அடிப்படையில் புஜாரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று எனக்கு தற்போது வரை புரியவில்லை. யாருக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுத்தாலும் அவருடன் முதுகில் தட்டிக் கொடுத்து ஒன்றாக பயணிக்க வேண்டும். எனக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுத்த போது முதலில் எதற்காக கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. அதை ஒரு பொறுப்பாக எடுத்துக் கொண்டு நான் செயல்பட்டேன்.

துணை கேப்டன் பொறுப்பு அணியில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டு பண்ணப்போவதில்லை என்றாலும், அணியில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. நமக்கு கூடுதல் பொறுப்பு உண்டு.

ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா இருவரும் கடந்த காலங்களில் இந்திய அணிக்காக பல்வேறு டெஸ்ட் போட்டிகளை வெற்றிபெற்று தந்திருக்கிறார்கள். புஜாரா, ரிஷப்மென்ட் இருவரும் துணைக்கு கேப்டன் பொறுப்பிற்கு தகுதியானவர்கள். இருப்பினும் புஜாராவிற்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் மறுகேள்வி இன்றி அவருடன் இணைந்து நான் பணியாற்ற தயாராக உள்ளேன்.

புஜரா நிறைய அனுபவம் மிக்க வீரர். அவரிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றது. நான் கேப்டன், அவர் துணை கேப்டன் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒட்டுமொத்த அணியாகத்தான் செயல்படப்போகிறோம். அது அணியில் இருக்கும் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.” என்றார்.