” சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அடிக்க யாரும் எனக்கு ஊக்கம் அளிக்க தேவையில்லை ” – தன் முன்னாள் அணியை ஓப்பனாக கலாய்த்த டேவிட் வார்னர்

0
949
David Warner

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 50வது ஆட்டம், டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே, மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தனது பழைய அணியான ஹைதராபாத் அணியை எதிர்த்து டேவிட் வார்னர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஐ.பி.எல் சீசனில் பதினான்கு லீக் ஆட்டங்களில் மூன்றை மட்டுமே வென்று ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது. நடுவில் ஹைதராபாத் அணி நிர்வாகத்தோடு கேப்டன் டேவிட் வார்னருக்கு கருத்து முரண்பாடுகள் நிலவ, அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு, கடைசி சில போட்டிகளில் அணியிலிருந்தும் நீக்கினார்கள். இந்த நிலையில் மெகா ஏலத்திற்கு அவரை தக்கவைக்காமல் ஹைதராபாத் அணி நிர்வாகம் விட, டெல்லி அவரை ஏலத்தில் எடுத்தது.

இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் பதினான்கு ஐ.பி.எல் தொடர்களில் 2016ஆம் ஆண்டு ஒரே சீசனில்தான் ஹைதராபாத் ஐ.பி.எல் கோப்பையை வென்றிருக்கிறது. அந்த ஆண்டு அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாகவும் மிகச்சிறப்பாக விளையாடி, ஹைதராபாத் அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர் டேவிட் வார்னர். அந்தத் தொடரில் டேவிட் வார்னர் 17 போட்டிகளில் 9 அரைசதங்களோடு 848 ரன்களை குவித்திருந்தார்!

இந்த நிலையில் தான் கீழாக நடத்தப்பட்ட அணியோடு மோதும் முக்கியப் போட்டியில் நேற்று ஹைதராபாத் அணியைச் சத்தமில்லாமல் சிதைத்துவிட்டார். துவக்க வீரராகக் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல், சக அணி வீரர் ரோமன் பவெலையும் இயல்பாக ஆட உதவி செய்து, 58 பந்துகளில் 92* ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை டெல்லி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

போட்டி முடிந்து ஆட்ட நாயகன் விருது பெறுகையில் டேவிட் வார்னர் பேசியதாவது “ஆட்டத்தின் நடுவில் நான் களைப்பாக இருந்தேன். ஆட்டத்தின் போது வேகமாக ஓட முயன்றது எனக்கு முட்டாள்தனமாக இருந்தது. இவர்கள் துல்லியமாகவும் பலமாகவும் பந்தை அடிக்கிறார்கள். இவர்களால் 117 மீட்டர் வரை சிக்ஸர்களை பறக்க விட முடிகிறது. எனக்கு வயதாகிறது. நான் ஜிம்மிற்கு செல்ல வேண்டும். நான் இப்போது 85 மீட்டர் சிக்ஸர்கள்தான் அடிக்கிறேன். இந்த நிலையில் என்னால் 100 மீட்டர் சிக்ஸர்களை அடிக்க முடியும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்!