நான் ஒன்றும் தோனியை திருமணம் செய்து வாழவில்லை – தோனி குறித்து ஹர்பஜன் சிங் நகைச்சுவைப் பேச்சு

0
418
Harbhajan Singh and MS Dhoni

இந்திய அணிக்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா சூழல் கூட்டணி கிடைப்பதற்கு முன்பு தனி ஒருவனாக சூழலில் சில காலம் அசத்தியவர் ஹர்பஜன் சிங். இவரின் ஆரம்பகால கிரிக்கெட்டில் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ளேவுடன் இணைந்து இவர் இந்திய அணிக்காக பெற்றுத்தந்த விக்கெட்டுகள் ஏராளம். கும்ளே ஓய்வு பெற்ற பின்பு கூட தனியாளாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சிறிது காலம் தூக்கி சுமந்தார். டெஸ்ட் போட்டிகளில் 400 க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ள ஹர்பஜன் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நீண்ட காலம் இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருந்த ஹர்பஜன் அது கிடைக்காத காரணத்தினால் ஓய்வை அறிவித்து விட்டார்.

ஓய்வை அறிவித்த பின்பு சில நாட்கள் சென்ற பிறகு பேட்டி ஒன்றை அளித்திருந்தார் ஹர்பஜன். நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்த ஹர்பஜன் எனக்கு இன்னமும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தனக்கு மட்டுமில்லாது அவருடைய சக வீரர்களான கம்பீர், சேவாக், யுவராஜ் போன்றோருக்கும் இன்னமும் அதிக வாய்ப்புகள் தரப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

உலகக் கோப்பை வென்ற சிறிது நாட்களிலேயே அந்த அணி கலைக்கப்பட்டு விட்டது என்றும் தோனிக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார். உலக கோப்பை வென்ற வீரர்கள் சிறப்பாக ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடியதால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஹர்பஜன் தோனியை குறை கூறுகிறார் என்று பலரும் இந்த கருத்துக்களை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். தற்போது அதற்கு பதில் கூறியுள்ளார் ஹர்பஜன் தான் தோனி பற்றி கூறுவதற்கு அவருடன் திருமண உறவில் ஒன்றுமில்லை என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். மேலும் தோனி தனக்கு நீண்டநாளாக நெருங்கிய நண்பர் என்றும் தன்னுடைய கோபமெல்லாம் இந்திய அணியை ஒற்றுமையாக இருக்க விடாத தேர்வுக் குழுவின் மேல்தான் என்றும் கூறியிருந்தார்.

மேலும் தான் நீக்கப்பட்டபோது தேர்வுக்குழுவிடமே நேரடியாக சென்று கேட்டதாகவும் ஆனால் அவர்கள் தங்கள் கையில் எதுவும் இல்லை என்று கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். என்னுடைய ஆதங்கம் எல்லாம் இதற்கு விடை தெரியவில்லை என்றால் நீங்கள் எதற்காக தேர்வுக்குழுவில் இருக்கிறீர்கள் என்பதே ஆகும் என்று ஹர்பஜன் சற்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.

- Advertisement -