சேவாக்-கிற்கு கிடைத்த சுதந்திரம், இந்திய அணியில் எனக்கு கிடைக்கவில்லை; என்னை இந்திய அணியில் பாரபட்சமாக நடத்தினார்கள் – முரளி விஜய் வருத்தம்!

0
605

இந்திய அணியில் சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் தனது கிடைக்கவில்லை என மிகவும் வருத்தத்துடன் பேட்டி அளித்துள்ளார் முரளி விஜய்

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் முரளி விஜய், நான்காண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. கடைசியாக பெர்த் மைதானத்தில் டிசம்பர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டியில் அவர் விளையாடவில்லை. தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்காகவும், டிஎன்பிஎல் போட்டிகளில் சில அணிகளுக்காகவும் விளையாடி வந்தார். தனது அதிரடியையும் வெளிப்படுத்தினார்.

எதற்காகவும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. பிசிசிஐ மதிக்கவே இல்லை என்கிற பாணியில் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார் முரளி விஜய். அதன் பிறகு இந்திய பெண்கள் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராமனிடம் மனம்திறந்து பேசியுள்ளார். அதில் இந்திய அணிகள் துவக்க வீரராக இருந்தபோது வீரேந்திர சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் தனக்கு கிடைக்கவில்லை என வருத்தமாக பகிர்ந்திருக்கிறார். முரளி விஜய் பேசியதாவது:

“எனது முழு மனதுடன் கூறுகிறேன். இந்திய அணியில் நான் விளையாடிய போது ஷேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் நான் இன்னும் நன்றாக செயல்பட்டு இருப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன். சர்வதேச அளவில் விளையாடும் பொழுது அணி உங்கள் மீது வைக்கும் நம்பிக்கை மிகவும் அவசியம். அதைப் பொறுத்து தான் அணிக்கு உங்களது பங்களிப்பை கொடுக்க முடியும். உண்மையில் எனக்கு அது கிடைக்கவில்லை.

- Advertisement -

சர்வதேச லெவலில் விளையாடும் பொழுது உங்கள் இஷ்டத்திற்கு பல வகைகளில் முயற்சிகள் செய்ய முடியாது. அப்படி செய்ய வேண்டும் என்றால் அணி நிர்வாகத்தின் நம்பிக்கை தேவை அந்த வகையிலும் எனக்கு நம்பிக்கை கிடைக்காதது பெரும் வருத்தத்தை கொடுத்தது.

களத்தில் சேவாக் உடன் விளையாடும் பொழுது நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. என்னை கட்டுப்பாட்டிற்குள் வைத்தது போலவே உணர்ந்தேன். இந்திய அணியில் இருக்கும் பொழுது தொடர்ச்சியான பங்களிப்பை கொடுக்க வேண்டும். அதற்காக நீங்கள் பலவிதமாக முயற்சிக்க வேண்டும். அதே நேரம் அணிக்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவை அனைத்தையும் சேவாக் உடன் களமிறங்கும் பொழுது என்னால் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவரிடம் முழு சுதந்திரம் கொடுத்த அணி நிர்வாகம் எனக்கு அதை கொடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இன்றளவும் இருக்கிறது.” என பேசினார்.