“நன்றிகெட்ட அணி நிர்வாகம்”; உள்ளே இருப்பவர்கள் கோழைகள் – ஆஸ்திரேலியா முன்னாள் பயிற்சியாளர் கடும் சாடல்!

0
901

ஆஸ்திரேலியா அணிக்காக அனைத்தையும் பெற்று தந்தேன். ஆனால் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டனர் என முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

ஆஸ்திரேலியாவின் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 2018 ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளர் பொறுப்பேற்று பதவி வகித்து வந்த ஜஸ்டின் லாங்கர், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீரர்களின் வாக்கெடுப்பில் போதிய வாக்குகள் இல்லாததால் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

இவர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் ஆசஸ் தொடரை வென்றது. அதே ஆண்டு டி20 உலக கோப்பையையும் வென்றது. மேலும் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்திருந்தது.

இப்படி ஆஸ்திரேலியா அணிக்கு தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றுத்தந்த லாங்கரை உடனடியாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இது குறித்து சமீபத்திய பேட்டிகள் மனம் திறந்து அவர் பேசியிருக்கிறார் லாங்கர். அதே பேட்டியில் ‘கோழைகள்’ என்று பெயர் குறிப்பிடாமல் சிலரை சாடினார். அவர் பேசியதாவது:

- Advertisement -

“ஆஸ்திரேலியா அணியில் பேட் கமெண்ட்ஸ், வார்னர் உட்பட பலரும் என் முகத்திற்கு நேரே நன்றாக பேசினார்கள். ஆனால் எனக்கு பின்னே சென்று என்ன பேசினார்கள் என்பதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்.

ஆஸ்திரேலியா அணிக்காக டி20 உலக கோப்பை, நம்பர் ஒன் இடம், ஆஷஸ் தொடர் என பலவற்றை நான் பெற்றுத் தந்திருக்கிறேன். ஆனால் என்ன காரணத்திற்காக என்னை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள் என்று புரியவில்லை.

எந்த வகையில் நான் அவர்களுக்கு குறைவாக செயல்பட்டேன். அணியில் பல கோழைகள் இருக்கின்றனர் முகத்திற்கு நேரே ஒன்று பேசிவிட்டு பின்னே சென்று காயப்படுத்துகின்றனர்.

கடைசி நேரத்தில் அணி நிர்வாகத்திடம் என்னைப் பற்றி தவறாக கூறியிருக்கின்றனர். அணி நிர்வாகமும் அதை உண்மையா? இல்லையா? என்று உறுதிப்படுத்தாமல் முடிவை எடுத்திருக்கிறது. பலரும் முகம் தெரியாத ஒருத்தர் கொடுத்தார் என்று குறிப்பிட்டனர். ஆனால் அவரை ‘கோழை’ என்று கூறுங்கள் என நான் தற்போது கூறுகிறேன்.” என்று காட்டமாக பேசினார்.