” நான் இந்த வெற்றியை இவர் பிறந்த நாளுக்காக சமர்ப்பிக்கிறேன் ” – 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஆவேஷ் கான்

0
233

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி சற்று முன்னர் நடந்து முடிந்தது.82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 3-வது மற்றும் 4-வது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் b தற்போது 2-2 என்கிற கணக்கில் சமனில் உள்ளது.

இங்கு நடந்த 4வது போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தடுமாறியது. பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி இந்திய அணியை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

குறிப்பாக தினேஷ் கார்த்திக் இன்று அதிகபட்சமாக 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ( 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள்) அசத்தினார்

சிறப்பாக விளையாடிய ஆவேஷ் கான்

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 87 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் குறிப்பாக ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். குறிப்பாக ஒரே ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது. அவருடைய சிறப்பான பந்துவீச்சு இன்று இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.

- Advertisement -

வெற்றியை தனது தந்தைக்கு சமர்ப்பித்த ஆவேஷ் கான்

சிறப்பாக விளையாடிய அவர் போட்டி முடிந்ததும் என்று தான் சிறப்பாக விளையாடிய இந்த ஆட்டத்தை தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.”நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று என்னுடைய தந்தையின் பிறந்தநாள். இன்று நான் ஆடிய இந்த சிறப்பான ஆட்டத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்”, என்று சந்தோஷத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் ஐந்தாவது டி20 போட்டியில்(வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டி) வெற்றி பெறும் அளவுக்கு ஒரு அணியாக நாங்கள் இணைந்து விளையாடும் போதும் எங்களுடைய 100 சதவீத பங்களிப்பு அப்போட்டியில் வெளிப்படுத்துவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.