“உங்களுக்காக குல்தீப் யாதவை பாகிஸ்தானுக்கு செலக்ட் பண்ண முடியாது!” – தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் பதில்!

0
10820
Kuldeep

சில வாரங்களுக்கு முன்னால் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது.

ஆனால் ஆசியக் கோப்பை தொடர் முடிவடையும் பொழுது அப்படியே இந்த கணிப்புகள் மாறி இருக்கின்றன. ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இருந்த பிரச்சனைகள் என்னென்ன என்று தெளிவாக வெளியே தெரிந்திருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை முழுக்க முழுக்க பாபர் அசாம் பேட்டிங் செயல்பாட்டை பொறுத்தே அமைந்திருக்கிறது. அவர் சரிவர செயல்பட முடியாத பொழுது ஆடுகளத்திற்கு தகுந்த ரன்களை பாகிஸ்தான் பேட்டிங் யூனிட்டால் கொண்டுவர முடியவில்லை.

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு தரமாக இருந்தாலும் கூட, அவர்கள் ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு தங்களை உடனடியாக மாற்றிக் கொண்டு செயலாற்றும் அனுபவம் இல்லாமல் இருந்தார்கள்.

மேலும் பாகிஸ்தான் அணியில் மதியம் ஓவர்களை சரியாக வீசக்கூடிய திறமையான சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது பெரிய குறையாக இருந்தது. இப்படி ஒட்டு மொத்தமாக உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. நசீம் ஷா காயத்தால் தொடரை இழந்திருக்கிறார். அதேவேளையில் ஹசன் அலி திரும்ப வந்திருக்கிறார். மேலும் புதிய சுழற் பந்துவீச்சாளராக உசாமா மிர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி குறித்து பேசி உள்ள தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் பேசும் பொழுது ” முதல் பிரச்சனை என்னவென்றால் குல்தீப் யாதவை என்னால் பாகிஸ்தான் அணிக்காக தேர்வு செய்ய முடியாது.அவர் இந்தியாவுக்காக விளையாடுகிறார்.

நாங்கள் சதாப் மற்றும் நவாஸ் இருவரையும் தொடர முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் சொல்வது போல பந்துவீச்சில் கடந்த காலத்தில் அவர்கள் சரியாக செயல்படவில்லைதான். ஆனால் இந்த முறை செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால் நம்மிடம் உசாமா மிர் இருக்கிறார்.

முகமது அமீர் நல்ல பந்துவீச்சாளர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தானுக்காக விளையாட விரும்பினால், இங்கு வந்து உள்நாட்டு போட்டிகளில் விளையாடி நிரூபிக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்ததை பார்க்கலாம். இங்கு யாருக்குமே கதவுகள் மூடப்படவில்லை!” என்று கூறி இருக்கிறார்!